நைட் ரூமுக்கு வந்திடு… அமலா பாலே என்னை கூப்பிட்டார் – நடிகர் விஷால் பரபரப்பு பேட்டி!

Author:
2 September 2024, 11:52 am

கேரளா சினிமாவில் ஹேமா கமிட்டியின் பாலியல் புகார்கள் தொடர்ந்து பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழ் சினிமாவிலும் அதன் தாக்கம் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. முன்னதாக நடிகர் விஷால் இது குறித்து பத்திரிக்கையாளரிடம் பேசியபோது அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு அழைக்கும் நபர்களை பெண்கள் தைரியமாக அந்த இடத்திலேயே அவர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என பேசியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

vishal

அதை அடுத்த நடிகர் விஷாலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். நடிகைகள் பலரும் விஷாலின் இந்த பேச்சுக்கு விமர்சித்து வந்த நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றில் கலந்து கொண்டு இது குறித்து பேசி இருக்கும் நடிகர் விஷால்…ஒருமுறை மலேசியாவில் திரைப்படச் சார்ந்த ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்திருந்தோம்.

அந்த நிகழ்ச்சிக்கு நடிகை அமலாபால் சென்றிருந்தார். அப்போது அந்த நிகழ்ச்சியின் மேனேஜர் அமலா பாலிடம் நைட் டின்னருக்கு ரூமுக்கு வந்துவிடு என்று மறைமுகமாக படுக்கைக்கு அழைத்தார். இதைக் கேட்டு கொந்தளித்துப் போன நடிகை அமலா பால் அந்த மேனேஜரை அங்கேயே அந்த இடத்திலேயே அடித்து துவைத்து விட்டார்.

உடனடியாக அங்கிருந்தபடியே என்னை போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை விரிவாக விளக்கினார். உடனடியாக நான் அதற்கு ஆக்ஷன் எடுத்தேன். நான் கார்த்தியை தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொன்னேன். பிறகு அந்த மேனேஜரை காவல் நிலையத்தில் ஒப்படைக்க தேவையான எல்லா ஏற்பாடுகளையும் அடுத்தடுத்து உடனடியாக செய்தோம்.

amala paul-updatenews360amazing

அப்படியான உடனடியாக நடவடிக்கைகள் தான் இங்கு தேவைப்படுகிறது. முதலில் யாராவது உங்களில் அப்படி தவறாக அணுகும் பட்சத்தில் பெண்கள் தயவு செய்து செருப்பை கழட்டி அடிக்க வேண்டும். புதிதாக திரைத்துறைக்கு இளம் பெண்களுக்கு நான் ஒன்றே ஒன்றுதான் சொல்லுகிறேன்.

உங்களுக்கு என்ன மாதிரியான பாலியல் தொந்தரவுகள் இருந்தாலும் என்னிடம் முதலில் வந்து உடனடியாக சொல்லுங்கள் அதற்கான தேவையான நடவடிக்கைகள் நான் எடுக்க தயாராக இருக்கிறேன் என விஷால் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 303

    0

    0