“PAN INDIA”படத்தில் விஷால் .. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு..!

Author: Rajesh
5 May 2022, 6:50 pm

எனிமி திரைப்படத்தை தொடர்ந்து, விஷாலின் 33வது படமாக உருவாகும் திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். ‘மாநாடு’ படத்தின் மூலம் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யா வில்லனாக இணைந்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினி ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் வினோத்குமார் பிரமாண்டமாக தயாரிக்கிறார்.

இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் . மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சுனில் வர்மா, நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள். ஜி வி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார் .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது . இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது .

  • Squid Game 2 Today Release timing on Netflix இன்று வெளியாகும் SQUID GAME 2…. எத்தனை எபிசோடுகள் தெரியுமா?
  • Views: - 1248

    0

    1