தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். திரைப்பட தயாரிப்பாளரும் கூட… திரைப்பட தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் இளைய மகன் விஷால் சென்னை லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்தார்.
ஆக்ஷன் படங்களில் நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர், அவர் தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் ஃபிலிம் பேக்டரியின் கீழ் படங்களைத் தயாரிக்கிறார்.
அர்ஜுனிடம் உதவி இயக்குநராகத் திரையுலகில் நுழைந்த விஷால் பின்னர் அவர் ஒரு நடிகரானார். செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்தார். படமும் வெற்றி பெற்றது.
பின்னர் சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி மற்றும் மலைக்கோட்டை ஆகிய திரைப்படங்களில் நடித்தார். பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்த தொடர்ச்சியான படங்களைத் தொடர்ந்து, விஷால் தனது சொந்த தயாரிப்பு ஸ்டுடியோவை உருவாக்கினார்.
பின்னர் பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன் மற்றும் பூஜை போன்ற லாபகரமான முயற்சிகளைத் தயாரித்து வேலை செய்துள்ளார். விஷால், நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக அக்டோபர் 2015 இல், முந்தைய கமிட்டிக்கு எதிராக ஒரு இயக்கத்தைத் தொடங்கிய பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்ச்சைகளில் சிக்கிய விஷால் மீது பல விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில், விஷாலின் நெருங்கிய நண்பர்கள் ரமணா மற்றும் நந்தா இவர்கள் இருவரும் இனைந்து விஷாலை வைத்து லத்தி எனும் படத்தை தயாரித்திருந்தார்கள். இந்த படம் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து படுதோல்வியடைந்த நிலையில், படக்குழு நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.
லத்தி படத்தின் தோல்வியால் விஷால், நந்தா மற்றும் ரமணா நண்பர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நட்புக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தயாரிப்பாளர்கள் ரமணா மற்றும் நந்தா இருவரும் நடிகர் விஷாலுக்கு ரூ. 1 கோடி சம்பள பாக்கியும் தரவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் இருவர் மீதும் விஷால் கோபத்தில் இருப்பதாக தகவல் வெளியானது.
இதனிடையே, அடுத்து துப்பறிவாளன் 2, மார்க் ஆண்டனி போன்ற படங்கள் வெளியாக உள்ளது. இந்நிலையில், செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விஷால் பங்கேற்றார்.
அப்போது கிராமம் போன்று செட் அமைக்கப்பட்டு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட விஷாலுக்கு மயிலாட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம் மூலம் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
மேலும், நடிகர் விஷால் மாட்டு வண்டியில் பயணம் செய்து பெண்களுடன் இணைந்து நடவும் நட அப்போது எதிர்ப்பாராத விதமாக அவரது உடை கிழிந்தது.
உடனே அங்கு இருந்தவர்கள் மாற்று உடையை கொடுத்துள்ளார்கள், ஆனால் விஷால் விவசாயம் செய்யும் போது கிழிந்தது தானே அது பெருமையான விஷயம் என்று தெரிவித்து அந்த உடையிலேயே நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்.
இந்திய இசையமைப்பாளர்களின் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமாக இருப்பவர் அனிருத்தான். இவர் இசையமைக்கும் அத்தனை ஆல்பமுமே ஹிட் ஆவதால் தயாரிப்பாளர்கள்…
வித்தியாசமான கதைக்களம் சிவகார்த்திகேயனின் நடிப்பில் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான “மாவீரன்” திரைப்படம் சிவகார்த்திகேயனின்…
பிக் பாஸ் பிரபலம் தர்ஷன் கைது செய்யப்பட்டது சென்னையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேற்று மாலை ஜிம்மில் இருந்து திரும்பிய…
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே உள்ள மேட்டு இருங்களூரை சேர்ந்த துரைசேகர் என்பவரது மகன் 25 வயதுடைய ஜெகன். பி.காம்…
பல்வேறு நாடுகள் மீது அமெரிக்க அதிபர் கூடுதல் வரி விதிப்பை அறிவித்ததன் எதிரொலியால் பங்குச்சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்கா…
முழு நேர அரசியலில் விஜய் தனது கடைசி திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்துக்கொடுத்துவிட்டு முழு நேர அரசியல்வாதியாக உருமாறவுள்ளார் விஜய்.…
This website uses cookies.