அய்யய்யோ.. அந்த ஹீரோயினா வேண்டாம்.. ராசி இல்லாத நடிகை என முத்திரை குத்தி ஒதுக்கும் விஷால்..!

Author: Vignesh
26 April 2024, 4:35 pm

வேலியில் போகும் ஓணானை எடுத்து வேட்டிக்குள் விட்ட கதையாக விஷால் தற்போது, பல விஷயங்களை செய்து சமூக வலைதளங்களில் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார். தான் சும்மா இருந்தாலும் தன்னுடைய வாய்ஸ் சும்மா இருக்காது என்று சொல்வதற்கு ஏற்ப தேவையில்லாத வீண் பேச்சால் பல சர்ச்சைகளிலும் சிக்கி கேலி கிண்டலுக்கு ஆளாகி வருகிறார். அதற்கு ஏற்றார் போல் இவருடைய படங்களும் வியாபாரமாகாமல் தொடர் தோல்வியை சந்தித்து வருகிறது.

rathnam

மேலும் படிக்க: ஆத்தாடி இம்புட்டு விலையா?.. ஷங்கர் மகள் கல்யாணத்தில் கண்ணைப் பறித்த நயனின் Watch..!

இந்நிலையில், இயக்குனர் ஹரி இயக்கத்தில் சிங்கிள் ஹீரோவாக விஷால் ரத்தினம் படத்தில் நடித்திருந்தார். இதில், இவருக்கு ஜோடியாக பிரிய பவானி சங்கர் நடித்துள்ளார். இப்படம் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்று ரத்தினம் படத்தில் உள்ள மொத்த டீமும் பிரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அதற்காக, விஷால் மற்றும் ஹரி இருவரும் சேர்ந்து படத்தின் பிரமோஷன் களை செய்து வருகிறார்கள்.

rathnam

ஆனால், இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் மட்டும் ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக பிரியா பவானி சங்கருக்கு 80 லட்சம் வரை சம்பளமாக கொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் பிரமோஷன் நடந்து வரும் நிலையில், பிரியா பவானி சங்கரை கூப்பிடாமல் விஷால் மற்றும் ஹரி மட்டுமே பிரமோஷன் பணிகளை செய்து வருவது பலரிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

hari-priya-vishal

மேலும் படிக்க: அந்த மாதிரி பார்த்தாரு.. விஜய் குறித்து உண்மையை வெளியிட்ட கில்லி பட நடிகை..!

மேலும், பிரியா பவானி சங்கர் முதல் முதலாக நடித்து அறிமுகமான மேயாத மான் படத்தை தயாரித்த ஸ்டோன் பென்ச் நிறுவனம் தான் இந்த ரத்தினம் படத்தையும் தயாரித்துள்ளது. பிரியா பவானி சங்கர் தவிர்க்கிறாரரா அல்லது படக்குழு இவரை தவிர்க்கிறதா என்று தெரியவில்லை. எனினும், இதற்கு பின்னணியில் ஏதோ ஒரு விவகாரம் இருப்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிகிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

priya bhavani shankar

இந்நிலையில், பிரியா பவானி சங்கர் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளிலும் பிரஸ்மீட் நிகழ்ச்சிகளும் ஏன் கலந்து கொள்ளவில்லை என்ற விளக்கத்தை பிரபல பத்திரிக்கையாளர்கள், சக்திவேல் யூடியூப் சேனல் ஒன்றில், கொடுத்திருக்கிறார். அதாவது, நடிகை பிரியா வேறு ஒரு படத்தில் நடிக்கிறார் என்று ஒரு பொய்யை விஷால் கூறியிருக்கிறார். ஆனால், விஷால் தான் பிரியா பவானி சங்கரை வர வேண்டாம் என்று சொல்லி இருக்கிறாராம்.

priya bhavani shankar

சமீபத்தில், அவர் நடித்த படங்கள் சரியாக ஓடவில்லை. அதனால், அவர்கள் வரவேண்டாம். நானே பிரமோஷன் செய்து கொள்கிறேன் என்று ஹரியிடம் விஷால் கூறியிருக்கிறார். ஆனால், இயக்குனர் ஹரிக்கு ப்ரியா பவானி சங்கர் பிரமோஷன் செய்ய வேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கிறது. விஷால் நடித்த படங்கள் கூடத்தான் போகாமல் இருக்கிறது என்று பிஸ்மி மற்றும் சக்தி கூறி இருக்கிறார்கள். பிரமோஷன் ஒரு பக்கம் இருந்தாலும் போஸ்டரில் கூட பிரியா பவானி சங்கர் முகத்தை காணோமே என்றும், ஒரு போஸ்டரில் கூட பிரியா பவானி சங்கர் போட்டோ இருந்ததை பார்த்து விஷால் அதை எடுத்து விடுங்கள் என்று கூறியதாக பத்திரிக்கையாளர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 373

    0

    0