அடக்கடவுளே.. விஷாலுக்கு கை நடுங்க காரணம் இதுவா? கொடுமை!
Author: Udayachandran RadhaKrishnan6 January 2025, 10:57 am
2012ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் மதகஜ ராஜா. விஷால், வரலட்சுமி, அஞ்சலி, சந்தானம் என பெரிய நட்சத்திர பட்டளாமே நடித்த இந்த படத்தை சுந்தர் சி இயக்கியிருந்தார்.
தயாரிப்பு நிறுவனத்தின் பிரச்சனையால் இந்த படம் ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டது. படத்தின் பாடல்கள் வரவேற்றை பெற்ற நிலையில் இந்த படம் வெளியாகுமா? ஆகாதா என்ற எதிர்பார்ப்பு எகிறியது.
ஆனால் காலம் செல்ல செல்ல, மதகஜ ராஜாவை மறந்தே விட்டனர். இந்த நிலையில் வரும் பொங்கலுக்கு அஜித்தின் விடாமுயற்சி படம் ரீலிசாகாது என்ற அறிவிப்பு வந்ததுமே, மதகஜ ராஜா படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் மும்முரம் காட்டியது.
அதன்படி பொங்கலுக்கு படம் வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். நெட்டில் மீம்ஸ்கள் பறந்ததால் இந்த படத்துக்கு பிரமோஷன் தானாகவே அமைந்துள்ளது.
இதையும் படியுங்க: 3 நாட்களாக மாறாத தங்கம், வெள்ளி விலை!
இந்த நிலையில் படம் குறித்த பிரமோஷன் விழா நேற்று சென்னையில் நடந்தது. இதில் கலந்து கொண்ட விஷால், வயதான தோற்றம் அளித்தவது போல இருந்ததால் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்பட்டது.
Get well soon Vishal! 🙏 pic.twitter.com/HBFka4r0Pl
— LetsCinema (@letscinema) January 5, 2025
பேசும் போது, கை நடுங்கியதால் விஷாலுக்கு என்ன ஆச்சு? என ஷாக் ஆகினர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது
இது குறித்து படக்குழு கூறியது இதுதான், விஷாலுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, அவருக்கு அதிகளவு வைரஸ் காய்ச்சல் இருந்ததால், படத்தின் வெளியீட்டு விழாவுக்கு மிகச் சிரமமடைந்து வந்தார். குளிர் அதிகமானதால் கை நடுங்கியதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விஷால் பூரண குணமடைந்து மீண்டு வருவார், அவரது ரசிகர்கள் கவலைப்பட தேவையில்லை என படக்குழு தெரிவித்துள்ளது.