ஆபாசம் தான் ஆனா சொல்லியே ஆகணும் – உண்மையாவே நான் அப்படி ஆகிட்டேன் – வெட்கத்தை விட்டு கூறிய விஷால்!

Author: Shree
26 May 2023, 3:43 pm

தமிழ் சினிமாவில் விசித்திர படைப்பாளியான பாலா இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். இப்படத்தில் ஆர்யா விஷால் நடித்திருந்தார்கள். ஜிஎம் குமார் ,ஆர்கே, மது ஷாலினி, ஜனனி ஐயர் மற்றும் அம்பிகா ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர் . இப்படம் ஒன்றுவிட்ட சகோதரர்களுக்கு இடையிலான உறவை காமெடியாக கொண்டு வெளியானது.

இப்படத்தில் விஷால் வால்டர் வணங்காமுடி கேரக்டரில் நடித்திருந்தார். அதில் பெண் வேஷம் போடு திருநங்கையாக நடித்து அசத்தியிருப்பார். அப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள விஷால், உண்மையை சொல்லப்போனால் நான் கிட்ட தட்ட அந்த கேரக்டராகவே ( திருநங்கை ) மாறிவிட்டேன்.

யாராச்சும் வந்து இடுப்பு கிள்ளினாங்கன்னா கூச்ச சுபாவத்துடன் பெண்கள் போன்றே நளினதோடு பேசுவேன். கோடி ரூபாய் கொடுத்தால் கூட இந்த அனுபவம் எனக்கு கிடைக்காது. இது ஆபாசம் தான் ஆனால், இதை நான் சொல்லியே ஆகணும்… கேமரா மேன் கொஞ்சம் சேலை விலக்கி ஹாட்டா காட்டுங்க என கேட்டதும் நான் உண்மையான திருநங்கை போன்றே நளினதோடு விலக்கி காட்டினேன். உடனே எல்லோரும் சிரித்தார்கள். கொஞ்சம் நாட்கள் நான் உண்மையான திருநங்கை போன்றே நடந்துக்கொண்டேன் . என் நடத்தையை பார்த்து எங்க அம்மா கதறி அழுதாங்க என பேசியிருக்கிறார். இதோ அந்த வீடியோ லிங்க்:

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 467

    1

    0