நம்ம ரெண்டு பேரும் அந்த மாதிரி இருக்கலாமா?.. பெண் போட்டியாளரிடம் வெளிப்படையாக கேட்ட விஷ்ணு..!(வீடியோ)

Author: Vignesh
10 December 2023, 2:45 pm

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, 7வது சீசன் பரபரப்பாக சென்றுக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில், போட்டிகள் ஒரு பக்கம் இருக்க பிக் பாஸ் நிகழ்ச்சியில் உள்ள போட்டியாளர்கள் குறித்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான வீடியோக்கள் வெளியாகி கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில், தற்போது பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்து முதல் வாரமே வெளியேறி பின் கடந்த சில வாரங்களுக்கு முன் வைல்டு கார்டு ஆக உள்ளே வந்தார் அனன்யா.

vishnu

இந்நிலையில், விஷ்ணு குறித்து அனன்யா பேசிய விஷயம் ஒன்று படுவைரலாகி வருகிறது. ஒருமுறை விஷ்ணு தன்னிடம் பேசியபோது நாம் இருவரும் ரிலேஷன்ஷிப்பில் இருக்கலாமா என கேட்டதாகவும், அதற்கு அனன்யா மறுப்பு தெரிவித்து விட்டதாகவும், இந்த வீடியோவில் கூறியுள்ளார். இதை விஷ்ணு ஒரு கேம் விளையாடுவதற்கான தந்திரமாக பயன்படுத்தி வருகிறார் என்று மற்ற போட்டியாளர்களும் இந்த வீடியோவில் கூறுகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாக வருகிறது.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்