அர்ச்சனாவுக்காக நடுதெருவில் விஷ்ணு செய்த விஷயம்.. சொன்னதை செஞ்சுட்டாரு..!(வீடியோ)

Author: Vignesh
17 January 2024, 12:04 pm

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரமபத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்றே அவர் டைட்டில் வென்றுள்ளதை நினைத்து ஆடியன்ஸ் எல்லோரும் ஹேப்பி ஆகிவிட்டனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்றும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து விரைவில் ஹீரோயின் ஆகிடுவார் என்றும் அனைவரும் கூறி வருகின்றனர்.

bigg boss 7

இந்நிலையில், டாப் 5 போட்டியாளர்களில் ஒருவரான விஷ்ணு, பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தபோது ஒரு விஷயத்தை கூறியிருக்கிறார். தினேஷ், அர்ச்சனா, மணி இவர்களில் மூவரில் யார் வெற்றி பெற்றாலும் 10,000 வாலா பட்டாசு வெடிப்பேன் எனக் கூறியிருந்தார். அதன்படி, பிக் பாஸ் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவிற்காக தற்போது நடுத்தெருவில் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளார். விஷ்ணு, அந்த புகைப்படம் தற்போது, இணையதளத்தில் வெளியாகி சொன்னதை செஞ்சுட்டாரே விஷ்ணு என ரசிகர்கள் இந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?