சம்யுக்தாவுடன் பொய்யான நரக வாழ்க்கை..- விஷ்ணுகாந்த் வெளியிட்டுள்ள திடீர் அறிக்கை..!

Author: Vignesh
31 May 2023, 3:04 pm

அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக திருமணம் ஆன ஒரே மாதத்தில் பிரிந்துள்ள நிலையில், இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

முன்னதாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டார். இப்படி ஒருத்தரை ஒருத்தர் மாறி மாறி குற்றம் சாட்டிக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் தான் சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் ஒரு பரபரப்பு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், அனைவருக்கும் வணக்கம்.

ஒருவரை நம்பி தனது திருமண வாழ்க்கையை தொடங்கிய சில நாட்களுக்குள் அந்த பொய்யான மற்றும் நரக வாழ்க்கையில் இருந்து தன்னை காப்பாற்றிய இறைவனுக்கும், இயற்கைக்கும் நன்றி.

samyuktha vishnukanth ravi-updatenews360

அதுபோன்று தனக்கு மிகவும் ஆறுதலாக இருந்த அனைத்து உள்ளங்களுக்கும் மற்றும் தன் மீது நம்பிக்கை வைத்து ஆதரவு தந்த மக்கள் அனைவருக்கும் மிக்க நன்றி. மேலும் நீங்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை யாராவது தகர்க்க நேர்ந்தால் அதையும் வென்று காட்ட மீண்டும் தயங்க மாட்டேன் என்று அறிக்கையில் தெரிவித்து இருக்கிறார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 472

    2

    0