சௌந்தர்யாவை ஜெயிக்க வைக்க காதலர் செய்யும் மிகப்பெரிய மோசடி : பரபரப்பு புகார்!
Author: Udayachandran RadhaKrishnan17 January 2025, 11:16 am
பிக் பாஸ் 8வது சீசன் கிளைமேக்ஸை நெருங்குகிறது. இறுதி வாரத்தை எட்டியுள்ளதால் டைட்டில் வின்னர் யார் என்பதை ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்ய உள்ளனர்.
இதையும் படியுங்க: நள்ளிரவில் பயங்கரம்… திருப்பதி தரிசனத்தை முடித்து திரும்பிய திருச்சி பக்தர்கள் 4 பேர் பலி!
ரசிகர்கள் தங்கள் ஃபேவரைட் போட்டியாளர்களை ஜெயிக்க வைக்க ஓட்டளித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியாளருக்கும் மிஸ்டு கால் நம்பர் மூலம் ஓட்டளிக்கலாம்.
அந்த வகையில், இறுதிபோட்டி வரை வந்துள்ள சௌந்தர்யா மீது பல புகார்களை சக போட்டியாளர்கள் வைத்து வரும் நிலையில், முன்னாள் போட்டியாளர் சனம் ஷெட்டி தற்போது பகீர் புகார் கூறியுள்ளார்.
அதாவது சௌந்தர்யா காதலர் விஷ்ணு, தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஒரு செல்போன் நம்பரை போட்டு, Urgent உடனே இந்த நம்பருக்கு கால் பணணுங்க என பதிவிட்டுள்ளார்.
அவரை பின்தொடர்பவர்களும் கால் செய்துள்ளனர். ஆனால் அது சௌந்தர்யாவுக்க ஓட்டளிக்கும் இலவச மிஸ்டு கால் என்பது பின்னர் தான் தெரிடந்தது. இப்படி விஷ்ணு SCAM செய்வதாக சனம் ஷெட்டி பரபரப்பு புகார் கூறியுள்ளார்.