திறமையை மட்டும் மட்டும் வெளிப்படுத்தி மக்கள் மனதில் சிறந்த நடிகராக நல்ல இடத்தை பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் வெண்ணிலா கபடிக் குழு படத்தில் நடித்து நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து குள்ளநரி கூட்டம், ஜீவா, நீர்ப்பறவை, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சசன், எஃப்.ஐ.ஆர், கட்டா குஸ்தி போன்றே பல்வேறு ஹிட் படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழை தவிர்த்து மலையாள சினிமா ரசிகர்களின் பேவரைட் ஹீரோவாகவும் இருந்து வருகிறார். இவர் ரஜினி நடராஜன் என்பவரை காதலித்து திருமணம் செய்து ஒரு மகன் பெற்று பின்னர் விவாகரத்து செய்துவிட்டார். மனைவியை பிரிந்ததற்கு பல்வேறு காரணங்களை அடுக்கடுக்காக கூறி கழவிட்டதை தாஸா பண்ணினார்.
பின்னர் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையான ஜுவாலா குட்டாவை காதலித்து லிவிங் டூ கெதரில் வாழ்ந்து இரண்டாம் திருமணம் செய்தார். இதெற்கெல்லாம் காரணம் இருவருக்கும் திருமணத்திற்கு முன்னர் இருந்த நெருக்கமான உறவு தான் என கிசுகிசுக்கப்பட்டது. அதையெல்லாம் தாண்டி தொடர்ந்து விஷ்ணு விஷால் தனது நடிப்பில் கவனம் செலுத்தி தற்போது ரஜினியுடன் லால் சலாம் படத்தில் அழுத்தமான ரோலில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்திய ஓட்டி ஒன்றில் மகன் இருக்கும்போது ஏன் மறுமணம் செய்தீர்கள் என கேள்விக்கு, நான் விவாகரத்து ஆன பிறகு திருமணமே வேண்டாம் என்ற முடிவில் தான் இருந்தேன். இப்படியே வாழ்க்கை ஒட்டிவிடவேணும் என நினைத்திருந்தேன். என் மகன் தான் எனக்கு எல்லாம் என்று நினைத்திருந்த சமயத்தில் தான் ஜுவாலா கட்டாவை சந்தித்தேன். அவர் என் மீது வைத்திருந்த அளவுக்கடந்த அன்பை பார்த்தும் ஒரு புதிய மகிழ்ச்சியான உணர்வை கண்டேன்.
அவரை பிடித்திருந்த போதிலும் திருமணம் செய்யும் எண்ணம் தோன்றவில்லை. எனக்கு திருமணம் வேண்டாம் என் மகன் தான் என் உலகம். இந்த நேரத்தில் நான் திருமணம் செய்தால் அதை அவன் வேறு மாதிரி எடுத்துக்கொள்வான் என்றேன். ஆனால், ஜுவாலா மகன் இருந்தால் என்ன? அதையும் மீறி எனக்கு உங்களை பிடித்திருக்கிறது என்றார்.
அப்போது நான் நமக்காக ஏன் நம் மீது அன்பு வைத்திருக்கும் ஒருவரை உதாசீனப்படுத்தவேண்டும் என எண்ணி ஜுவாலாவை மறுமணம் செய்தேன். அவருக்கு திருமணம் , குடும்பம், குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவங்களுக்கும் 10 வருஷத்துக்கு முன் விவாகரத்தாகி இருந்தது. ஆனாலும், ஜுவாலாவின் அருமையை பார்த்து இந்த வாழ்க்கையை நானாக அமைத்துக்கொண்டேன் என மிகவும் எமோஷ்னலாக கூறினார்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.