காப்பாத்துங்க.. வீட்டுக்குள்ள தண்ணி வந்துருச்சு.. கூரையின் மீது ஏறி உதவி கேட்ட விஷ்ணு விஷால்..!

Author: Vignesh
5 December 2023, 4:39 pm

வங்கக்கடலில் உருவாகிய மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுக்க வெள்ளநீரில் மிதக்கிறது. தொடர் கனமழையால் சாலைகளில் பல அடி உயரத்திற்கு நீர் தேங்கி இருக்கிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடைவிடாது பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ய அரசு தன்னால் முடிந்த அளவிற்கு மக்களுக்கு உதவி கொண்டு இருக்கிறது.

vishnu-vishal-updatenews360

இந்நிலையில், தற்போது விஷ்ணு விஷால் தனது வீடு வெள்ளத்தில் தத்தளிக்கிறது என்று கூறி கூரை மீது நின்று உதவி கேட்டு உள்ளார். மேலும், காரைப்பாக்கம் பகுதியில் தண்ணீர் கூடிக் கொண்டே போகுது நான் உதவி கேட்டு இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.

  • Actress Sneha has a rare disease.. Prasanna praises her courage! நடிகை சினேகாவுக்கு அரிய வகை நோய்.. தைரியத்தை பாராட்டும் பிரசன்னா!