“டபள் கேம் ஆடிய சம்யுக்தா” – வேறொரு ஆணுடன் தொடர்பு.. ரகசிய ஆடியோவை வெளியிட்டு திக்குமுக்காட வைத்த கணவன்..!

Author: Vignesh
25 May 2023, 5:49 pm

சீரியல் நடிகை சம்யுக்தா திருமணம் ஆன ஒரு மாதத்தில் சமூக வலைதளங்களில் திருமண புகைப்படங்களை நீக்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே, அண்மை நாட்களாக சீரியலில் இணைந்து நடிக்கும் ஜோடிகள் நிஜ வாழ்க்கையிலும் இணைவது வழக்காக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் சிற்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வந்த நடிகை சம்யுக்தா அதே சீரியலில் நடித்த விஷ்ணுகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

samyuktha vishnukanth-updatenews360

இதனிடையே, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளநிலையில், இருவரும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்த திருமண புகைப்படங்களை டெலிட் செய்து இருக்கிறார்கள்.

samyuktha vishnukanth-updatenews360

முன்னதாக விஷ்ணுகாந்த் சம்யுக்தா தன்னை காதலித்துக் கொண்டிருக்கும் போது நிறைமாத நிலவே சீரியல் நடித்த ரவி என்பவரை காதலித்து பிரேக்கப் ஆன பின்பும் அவருடன் பேசி இருப்பதாக பெரிய குண்டை துக்கிபோட்டு உள்ளார்.

இதற்கான ஆதாரம் இருக்கிறது என்று தெரிவித்து ஒரு ஆடியோவை வெளியிட்டு உள்ளார் விஷ்ணுகாந்த். அதில், ஆடியோவில் அண்ணனாக பேசியவருடன் தன்னிடம் காதலித்த போது தவறாக நடந்து கொண்ட ரவியிடம் பேசாமால் இருக்க முடியவில்லை என்று பல விதமான காரணங்களை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.

samyuktha vishnukanth-updatenews360

இப்படி அரை மணி நேரம் சம்யுக்தா பேசிய ஆடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, தன் அப்பாவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவினை சம்யுக்தா போட்டுள்ளார்.

அந்த பதிவில் வைரலாகும் ஆடியோ பற்றி பலர் கேள்விகளை கேட்டும் திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வந்துள்ளனர். தனக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி கூறியும் திட்டித்தீர்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தும் பதிலளித்துள்ளதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சம்யுக்தா இணையத்தில் பகிர்ந்து உள்ளது குறிப்டத்தக்கது.

vishnukanth samyuktha-updatenews360
  • suriya act in venky atluri movie soon before vaadivaasal மீண்டும் ரொமான்டிக் ஹீரோவாக களமிறங்கும் சூர்யா? அதுவும் இந்த டைரக்டர் படத்துலயா?