கல்யாணத்துக்கு OK.. ஆனால், சொந்த மருமகளுக்கே அப்படியொரு கண்டிஷன் போட்ட தம்பி ராமையா..!

ஒரு காலத்தில் ஹீரோவாக நடித்து வந்த ஆக்சன் கிங் அர்ஜூன் தற்போது வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துவருகிறார். அப்படி இவர் நடித்து தமிழில் வெளியான இரும்புத்திரை, கொலைகாரன் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து நடித்துவரும் லியோ படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. நடிகர் அர்ஜுனுக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள். இதில் ஐஸ்வர்யா தமிழில் விஷாலுக்கு ஜோடியாக பட்டத்து யானை படத்தில் நடித்திருந்தார்.

ஐஸ்வர்யா நீண்ட காலமாக தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் காதலில் இருந்துவருவதாகவும் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவிருப்பதாகவும் தகவல் பரவி வைரலாகியது. மேலும் அர்ஜுனும் தம்பி ராமையாவும் இணைந்து இருவரது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. ஆனால் இதுவரை இந்தத் தகவலை இரு தரப்பினரும் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ இல்லை.

இவர்களுக்குள் காதல் எப்படி மலர்ந்தது என நீங்கள் கேட்கலாம், நடிகர் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி ராமைய்யா போட்டியாளராக இருந்துள்ளார். அப்போது அந்த செட்டிற்கு அடிக்கடி ஐஸ்வர்யா வந்துபோவதுண்டாம். அங்கு தான் இருவரும் நட்பு ஆரம்பித்து பின்னர் காதலாக மாறியுள்ளது. இது அர்ஜுனுக்கு தெரியவர ஆரம்பத்தில் கொஞ்சம் யோசித்தாலும் பின்னர் சர்வைவர் நிகழ்ச்சியில் உமாபதி மிகவும் நல்ல குணம் உடையவராக இருந்துள்ளார் அதை நம்பி தன் மகளை கட்டிக்கொடுக்க அர்ஜுன் ஓகே சொல்லிவிட்டார். உமாபதி யாஷிகாவுடன் சேர்ந்து மணியார் குடும்பம் என்ற திரைப்படத்தில் நடித்ததால் அவருடன் கிசுகிசுக்கப்பட்டார்.

இதனிடையே ஐஸ்வர்யா அர்ஜுன் – உமாபதிக்கு நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் பிரம்மாண்டமாக நடந்தது. அதன் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி காட்டு தீயாய் பரவியது.

இந்நிலையில், பிரபல சினிமா விமர்சகர் வித்தகன் தம்பி ராமையா பற்றி ரகசியங்களை மறைமுகமாக கூறியிருக்கிறார். அதாவது, தன் மகன் காதலை ஏற்றுக் கொண்டதோடு மருமகள் ஐஸ்வர்யாவுக்கு ஒரு கண்டிஷன் போட்டு இருக்கிறார் தம்பி ராமையா. அதாவது, திருமணத்திற்கு பின்னர் ஐஸ்வர்யா நடிக்க கூடாது என்று கூறியிருக்கிறார். மேலும், உமாபதிக்கு வயது 28 ஐஸ்வர்யாவுக்கு 31 வயது ஆகிறது என்று வித்தகன் கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…

4 minutes ago

பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…

கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…

53 minutes ago

பெண்களை மதிக்கிற மாதிரி நடிப்பாங்க; ஆனா சுயரூபமே வேற- மாளவிகா மோகனன் யாரை சொல்றாங்க?

கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…

3 hours ago

பிரபல இயக்குநர் திடீர் மரணம்… திரையுலகம் ஷாக் : தயாரிப்பாளர் கண்ணீர் பதிவு!

தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…

3 hours ago

தவெகவின் உண்மையான கட்டமைப்பு என்னவென்று இன்று தெரியும்.. ஆதவ் அர்ஜூனா சஸ்பென்ஸ்!

தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…

3 hours ago

This website uses cookies.