அந்த ரெண்டு ஹீரோவும் என் படத்துல நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க: நடிகர் விவேக்கிற்கு தன்னலம் கருதாமல் உதவிய பிரபல நடிகர்..!
Author: Vignesh13 December 2022, 5:43 pm
மறைந்த நடிகர் விவேக் தன்னுடன் படத்தில் நடிக்க மறுத்த இரண்டு முன்னணி நடிகர்கள் குறித்து அளித்து இருந்த பழைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.
நடிகர் விவேக் தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர். நடிகர் விவேக் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் விவேக் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். மேலும், நடிகர் விவேக் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும், இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். நடிகர் விவேக் அப்துல்கலாம் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார்.
விவேக் மரணம்:
அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் நடிகர் விவேக்கின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த ஆண்டு நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
நடிகர் விவேக்கிற்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. விவேக் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள்.
விவேக் கடைசியாக நடித்த படம்:
நடிகர் விவேக் கடைசியாக இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் ஆர்யா நடித்து இருந்த அரண்மனை திரைப்படத்தில் இவர் நடித்து இருந்தார். இந்த படம் விவேக் மறைவுக்கு பின் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் மறைந்த விவேக் அவர்கள் மிர்ச்சி சிவாவுடன் இணைந்து LOL எங்க சிரி பார்ப்போம் என்ற நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று இருந்தார். இந்த நிகழ்ச்சி ஒடிடி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி இருந்தது. சமீபத்தில் தான் மறைந்த நடிகர் சின்ன கலைவாணர் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம் வந்து இருந்தது.
விவேக்கின் பழைய பேட்டி வீடியோ:
இந்நிலையில் நடிகர் விவேக் தன்னுடன் படத்தில் நடிக்க மறுத்த இரண்டு முன்னணி நடிகர்கள் குறித்து அவர் அளித்து இருந்த பழைய பேட்டி வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, விஸ்வநாதன் ராமமூர்த்தி என்ற ஒரு படம். அந்த படத்தில் நான் கதாசிரியராக நடித்திருப்பேன். அப்போது இயக்குனர் ராமநாதன் சார் வந்து இந்த படத்தில் நீங்க கதாசிரியராக இருப்பதினால் கொஞ்சம் பெரிய நடிகர்களை வைத்து பண்ணலாம் நன்றாக இருக்கும் என்று சொன்னார். நானும் சரி என்று சொன்னேன். அந்த நேரத்தில் இளம் கதாநாயகன்கள் இரண்டு பேர் நல்லா வந்து கொண்டிருந்தார்கள்.
அஜித்,விஜய் குறித்து சொன்னது:
இவர்களிடம் கேட்டேன். ஒரு நடிகர் நான் வீட்டில் கேட்கணும் என்று சொன்னார். இன்னொரு நடிகர், சினிமாவில் நன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் போது இந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்தால் படத்தின் விநியோகஸ்தர்கள் எல்லாம் உங்களுடைய மார்க்கெட்டுக்கு இதெல்லாம் தேவையா? என்று கேட்பார்கள். அதனால் முடியாது என்று சொல்லிவிட்டார் என்று கூறி இருக்கிறார். இப்படி இவர் கூறியிருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து விவேக் உடன் நடிக்க மறுத்த இரண்டு முன்னணி நடிகர்கள் விஜய், அஜித் தான் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.