மறைந்த நடிகர் விவேக்கை பேசச் செய்த ஏஐ; வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்

Author: Sudha
2 July 2024, 6:00 pm

ஏ தொழில்நுட்பத்தின் மூலம் மறைந்த பல பிரபலங்களையும் திரைக்கு கொண்டு வருவது தற்போது நிகழ்ந்து வருகிறது.அந்த வகையில் விஜயகாந்த் அவர்களை மூன்று திரைப்படங்களில் இந்த தொழில்நுட்பம் மூலம் நடிக்க வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் கோட் திரைப்படத்திலும் இளையராஜாவின் மகளான பவதார பவதாரணியின் குரலில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலை பாடச் செய்திருக்கின்றனர்.

இந்தியன் திரைப்படம் திரையிடுவதற்கு முன்பே மனோபாலா, விவேக் இருவரும் மறைந்ததால் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியன் 2 திரைப்படத்தில் மறைந்த நடிகர் விவேக் மற்றும் மனோபாலா இருவரின் குரல்களையும் ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் டப்பிங் பேசச் செய்து இருக்கின்றனர். கோட் திரைப்படத்தில் பணியாற்றிய கிருஷ்ண சேத்தன் இந்த திரைப்படத்திலும் விவேக் மற்றும் மனோபாலா இருவரின் குரல்களிலும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி டப்பிங் பேசச் செய்து இருக்கிறார்.இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக உள்ளது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!