நிறைவேறிய விவேக் ஆசை;கண்ணீர் வடித்த ரசிகர்கள்;இப்படியா நடக்கணும்?,..

Author: Sudha
13 July 2024, 3:52 pm

ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்தியன் 2 திரைப்படத்தில் நடிகர் விவேக் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். கொரோனா அலைக்கு முன் தொடங்கப் பட்டது இந்தியன் 2 திரைப்படம்.

திரைப்பட ஷூட்டிங்கில் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் பலியாகினர். அதனால் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.சென்ற வருடம் மீண்டும் இந்தியன் 2 திரைப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டு படம் ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புடன் நேற்று திரையிடப் பட்டது.

உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது நடிகர் விவேக்கின் நீண்ட கால ஆசை.அதை பல மேடைகளிலும் விவேக் சொல்லியிருப்பார்.அவருடைய ஆசை இந்தியன் 2 படத்தில் நிறைவேறியது. ஆனால் திரையில் அவரை பார்க்க விவேக் உயிருடன் இல்லை. உங்களின் ஆசை இப்படியா நிறைவேற வேண்டும்.?திரையில் உங்களை பார்க்கும்போது நீங்கள் உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

இந்தியன் 2 படத்தில் நடித்து வந்த விவேக் இறந்தபோதிலும் அவரின் காட்சிகளை நீக்காமல் அப்படியே வைத்தார் ஷங்கர். அதற்காக அவருக்கு விவேக் ரசிகர்கள் நன்றி தெரிவித்தனர்.திரையில் இந்தியன் தாத்தாவுடன் விவேக்கை பார்த்த ரசிகர்களால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் நெகிழ்ந்து அழுதனர்.

  • Ajith 102 fever shooting dedication “SAWADEEKA”பாடலுக்கு அஜித் செய்த தியாகம்…கல்யாண் மாஸ்டர் சொன்ன தகவலை கேட்டு ரசிகர்கள் ஷாக்..!
  • Views: - 148

    0

    0