டேய் கிறுக்கா… இன்னொரு வாட்டி இப்படி பண்ண பொளந்திடுவேன் – கூல் சுரேஷை எச்சரித்த தொகுப்பாளினி!

Author: Shree
22 September 2023, 4:42 pm

தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும், ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார். வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு.. சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

cool suresh-updatenews360.png 2

வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனில் ஆரம்பித்து தற்போது வரை திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து கூல் சுரேஷ் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் பரஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ வெளியாகும்போதெல்லாம் பிரபலமாக பேசப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலகையில் மன்சூர் அலிகான் ஹீரோவாக நடித்துள்ள சரக்கு படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜெயக்குமார் ஜே என்பவர் இயக்கியுள்ளார். மேலும், ஹீரோயினாக வலினா ஃபிரண்ஸ் நடிக்க, சிறப்பு தோற்றத்தில் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படமானது ஒட்டுமொத்த தமிழ்நாட்டையே திருப்பி போடும் வகையில் இருக்கும் என நேர்காணல் ஒன்றில் மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார்.

அண்மையில், இதற்கான இசை வெளியீட்டு விழாவில், சர்ச்சையாக பேசி வாங்கி கட்டிக் கொண்டார் கூல் சுரேஷ் . எப்போதும் போலவே ஒரு சர்ச்சையான சம்பவத்தை சரக்கு இசை வெளியீட்டு விழாவில் செய்துள்ளார். அதாவது அவரைப் பேச தொகுப்பாளரை அழைத்தார். அப்போது, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு கையில் ஒரு மாலையுடன் வந்த அவர், சற்றும் எதிர்பாராத விதமாக தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

இதனை கண்டு தொகுப்பாளினி கடும் கோபம் அடைந்தார். எல்லோருக்கும் மாலை போட்டிங்க… ஆனா, நம்மை வித்தியாசமான வார்த்தைகளை கூறி வரவேற்க்கும் இவருக்கு மாலை போட்டோமா? என அவர் காரணம் கூறினாலும், இந்த சம்பவம் பத்திரிகையாளர் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

உடனடியாக மன்சூர் அலிகான் நன்றி தெரிவிக்க வந்தபோது, அவரிடம் ஒரு பெண் தொகுப்பாளினியிடம் கூல் சுரேஷ் இப்படி நடந்து கொள்ளலாமா? என கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த மன்சூர் அலிகான் கூல் சுரேஷ் அப்படி நடந்தது தவறுதான். அவருடைய செயலை கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன். அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என கூறி கூல் சுரேசையும் மன்னிப்பு கேட்க சொன்னார்.

ஆனால், அவரோ வித்யாசமான விளக்கம் ஒன்றே கொடுத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வந்ததிலிருந்து நானும் அந்த பெண்ணும் பேசிக் கொண்டிருந்தோம் எனக் கூற அந்த தொகுப்பாளினி நான் உங்களிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என பதில் கொடுத்தார். தொடர்ந்து தான் தெரியாமல் அப்படி செய்து விட்டதாகவும், மன்னிச்சுக்கோ தங்கச்சி எனச் சொல்லியும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தார். ஆனால், கூல் சுரேஷின் இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து கூல் சுரேஷுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் சம்பந்தப்பட்ட தொகுப்பாளினி ஐஸ்வர்யா, அந்த பேட்டியில், அன்னைக்கு நடந்ததை நினைத்தாலே அருவருப்பா இருக்கு. கூல் சுரேஷ் தீடிரென அப்படி நடந்துக்கொண்டது கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவர் என் தோள்பட்டையை பலவந்தமாக அழுத்திவிட்டார். அப்போவே அந்த ஆளை பளார்னு அடிக்காமல் விட்டது தப்பு. கிறுக்குத்தனத்திற்கு கொஞ்சம் எல்லைகள் இருக்கிறது தனிப்பட்ட யாரையும் அது பாதிக்காத படி கிறுக்கு வேலைகளை செய்ய வேண்டும்.

இவர் இதற்கு முன்னால் கூட ஒரு நிகழ்ச்சியில் என்னிடம் வம்பு பண்ணினார். எனவே இவரது நடவடிக்கைகள் எனக்கு பிடிக்காது. அதனால் நான் வெறும் ” நடிகர் சுரேஷ்” என்று அழைத்தேன். அவரோ எனக்கு பட்டப்பெயர் இருக்கிறது அதை சொல்லி அழைக்கமாட்டீங்களா? என கேட்டார். அந்த கடுப்பில் தான் அவர் என்னிடம் இப்படி நடந்துக்கொண்டார். இன்னொரு முறை இப்படி செய்தால் அங்கேயே கன்னத்தில் அரைவேன். இல்லையெனில் போலீசில் புகார் அளிப்பேன் என ஐஸ்வர்யா கட்டமாக பேசினார்.

  • Anirudh is in love with the daughter of a famous businessman. பிரபல தொழிலதிபரின் மகளை காதலிக்கும் அனிருத்.? இவங்களுக்குள்ள இப்படி ஒரு கனெக்ஷனா?