வைரமுத்துவிடம் “கவனமாக இருங்கள்” எச்சரித்த சின்மயிக்கு பதிலடி கொடுத்த விஜே அர்ச்சனா..!
Author: Vignesh23 December 2022, 7:00 pm
என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.
முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் இருந்தனர். ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
இந்நிலையில், விஜே அர்ச்சனா சமீபத்தில் கவிப்பேரரசு வைரமுத்துவை சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை விஜே அர்ச்சனா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படங்களில் ஒன்றில் தலையில் கை வைத்து விஜே அர்ச்சனாவை வைரமுத்து ஆசீர்வதிப்பது போல உள்ளது.
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான பாசிட்டிவ் கமெண்ட்ஸ் மற்றும் ஒருசில நெகட்டிவ் கமெண்ட்களை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த புகைப்படங்கள் வைரலானது. இதற்கு பாடகி சின்மயி கமெண்ட் அளித்துள்ளார், அதில் அவர் ‘ஆரம்பத்தில் இது போலத்தான் அனைத்தும் இருக்கும் எனவும், தயவு செய்து அவரிடம் கவனமாக இருங்கள் எனவும், அவரை சந்திக்கும் போது யாரையாவது துணைக்கு வைத்துக் கொள்ளுங்கள் எனவும், அவரிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.
இந்த கமெண்ட் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் விஜே அர்ச்சனா இந்த கமெண்ட்டை டெலிட் செய்து உள்ளார். இருப்பினும் ஒரு சிலர் இந்த கமெண்டை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
சின்மயிக்கும் வைரமுத்துவுக்கும் இடையே ஒரு பணிப்போரே நடந்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அர்ச்சனாவிடம் வைரமுத்து குறித்த பதிவில் சின்மயி போட்ட கமெண்ட் குறித்து கேட்கப்பட்டதற்கு பதில் அளித்த விஜே அர்ச்சனா நான் எப்போதும் போல அதை பற்றி எதுவுமே பேசவில்லை.
நான் அந்த பதிவை போட்டதற்கு காரணம் என்னுடைய தந்தை ஒரு தமிழ் பேராசிரியர் என்றும், எங்கள் குடும்பத்தில் தமிழுக்கு ஒரு பெரிய முக்கியத்துவம் இருக்கிறது எனவும், எல்லோரும் வைரமுத்து சாரருடைய சினிமா பாடலை தான் கேட்டிருப்பார்கள் ஆனால் நான் கேட்டது “நாட்படு தேறல் அதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் நாக்கு செவந்தவரை என்ற பாடல் தான்.
மேலும் இதுகுறித்து பேசிய விஜே அர்ச்சனா, நான் படப்பிடிப்பில் இருந்த போது அவரை திடீரென்று சந்தித்ததும் நான் ஹாய் சார் எப்படி இருக்கிறீர்கள் நான் உங்களுடைய மிகப் பெரிய ரசிகை என்று சொன்னதும் அவர் என்னை ஆசீர்வதித்தார். அவ்வளவுதான் நான் அவரிடம் பேசி இருந்தேன்.
எனக்கு சின்மயியை தனிப்பட்ட முறையில் யார் என்று தெரியாது என்றும், ஏதாவது ஒரு விஷயம் நடந்தால் அனைவரும் பேச தான் செய்வார்கள் எனவும், ஊர் வாயை நம்மால் அடைக்க முடியாது எனவும், இது ஒரு ஃபேன் கேர்ள் மொமென்ட்.. இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும் பிடிக்காதவர்கள் அப்படியே போகட்டும்’ என்று விஜே அர்ச்சனா தெரிவித்துள்ளார்.