அசிங்கமா இருக்கு.. அந்த பையனும் சாராவும் அப்படி இருக்கிற போட்டோ.. மனம் உடைந்த VJ அர்ச்சனா ..!

Author: Vignesh
13 February 2024, 7:45 pm

அர்ச்சனா விஜய் டிவி உள்ளிட்ட சேனல்களில் சின்னத்திரையில் பிரபலமான விஜேவாக திகழ்பவர். இவர் ‘டாக்டர்’ படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். அர்ச்சனா டிவி, யூடிப் சேனல் என்று கலக்கி வருகிறார்.

VJ Archana-updatenews360

சின்னத்திரையில் பிரபலமான இவர் ‘அச்சும்மா’ என்ற பெயராலே தற்போது ரேடியோ மிர்ச்சியிலும் அழைக்கப்படுவதால் ரசிகர்களுடன் ஒரு கனெக்ட் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இவர் சன் டிவி, விஜய் டிவி, ராஜ் டிவி, ஜீ தமிழ் என பல தொலைக்காட்சிகளில் ஹீட்டான நிகழ்ச்சிகளை நடத்தி இருக்கிறார். 1999 ஆம் ஆண்டு கல்லூரி படிக்கும்போதே தொகுப்பாளினியாக பயணித்து தொடங்கியவர் விஜே அர்ச்சனா.

vj-archana-updatenews360

இவர் சன் டிவியில் தொகுத்து வழங்கிய இளமை புதுமை நிகழ்ச்சி ஒரு பெரிய ரீச் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் சில இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் நம்ம வீட்டு கல்யாணம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வந்தார். ஜீ தமிழில் சரி கம பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார்.

இதற்கு முன்னதாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது மொத்த பெயரையும் டேமேஜ் செய்து கொண்டார்.

vj-archana-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அர்ச்சனா எனக்கும் சாராவுக்கும் அடிக்கடி சண்டை வரும் இப்போது கூட சண்டை போட்டுக் கொண்டுதான் வந்தேன். காரணம் என்னவென்றால் சாரா அவர் நண்பர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அதில் அவளும் ஒரு பெண்ணும் இரண்டு பசங்களும் இருந்தார்கள்.

VJ Archana - updatenews360

ஆனால், சாராவும் ஒரு பையனும் ஒண்ணா இருப்பது போல் கிராப் செய்து இவனோட ஆளு இவர்தான் என்று சக மாணவன் இன்ஸ்டாவில் ஸ்டோரில் சாராவை மென்சன் செய்து இருக்கிறார்கள். இது குறித்து சாராவிடம் கேட்டேன் அவள் விளக்கம் கொடுத்தார். ஆனாலும், அந்த புகைப்படத்தை பார்த்ததும் எனக்கு கோபம் வந்துவிட்டது. நான் சாராவை பற்றி மட்டும் யோசிக்கவில்லை அவளுடன் இருக்கும் அந்த பையனை நினைத்தும் கவலைப்பட்டேன்.

VJ Archana - updatenews360

சாரா மீடியாவில் இருக்கிறார் அதனால் இந்த பிரச்சனை எல்லாம் பெரிதாக தெரியாது. ஆனால், அவளோடு அந்த புகைப்படத்தில் இருக்கும் பையனுக்கு அப்படியா இருக்கும் என்று சொல்ல முடியாது என்று அர்ச்சனா வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். மேலும், இது போன்ற கீழ்த்தனமான செயல்களில் யாரும் ஈடுபடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 301

    0

    0