என்ன வேணா பண்ணிக்கோங்க நான் அத பண்ண மாட்டேன்.. தொகுப்பாளினி டிடி கூறிய உண்மை..!

Author: Vignesh
12 August 2023, 12:15 pm

டிவி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி. இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரு சட்டப்படி பிரிந்து விட்டனர்.

Dhivyadharshinis-updatenews360

இதனிடையே, சமீபத்தில் அக்கா பிரியதர்ஷினி உடன் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட டிடி குடும்பம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்துள்ளார். அதில், வெளிநாட்டுக்கு போய் ஏதாவது வாங்கி செலவு செய்ய மட்டும் தான் நான் கிரெடிட் வைத்திருக்கிறேன் என்றும், வேறு எதுக்கும் கிரெடிட் கார்டை பயன்படுத்தியது கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.

Dhivyadharshinis-updatenews360

மேலும், என்னைக்குமே சூதாடறவங்க பக்கத்துல உக்காந்தது கிடையாது. அது மாதிரி எதையும் விளம்பரப்படுத்தியதும் கிடையாது. ஐம்பது பைசா வைத்து விளையாடினதும் கிடையாது. அந்த ரேஸ் அந்த “ஷூ” மட்டும் பண்ணவே கூடாது நீங்க என்ன வேணா பண்ணிக்கோங்க நான் அதை பண்ண மாட்டேன். சூதாட்டம் ஆட சொன்னாலும் நீலகண்டன் பொண்ணு விளையாடாது என்று டிடி தெரிவித்துள்ளார்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 734

    1

    1