முருகர் வேடமிட்டு மகளுக்கு போட்டோ ஷுட் நடத்திய பிரபல VJ.. கியூட்டான தைப்பூசம் ஸ்பெஷல் கிளிக்ஸ்..!
Author: Vignesh25 January 2024, 6:10 pm
பிரபல தொகுப்பாளனியான தியா மேனன் கேரளாவில் பிறந்தவரான இவர், பள்ளிப்படிப்பை முடித்த பின்னர், கல்லூரியில் படிப்பதற்காக தமிழகத்துக்கு வந்தார். 2015 ஆம் ஆண்டு கோவையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு மீடியாவுக்குள் நுழைந்தார். இவர் தியா மேனன் தொகுப்பாளினியாக தன் கேரியரை தொடங்கிய சமயத்தில் இவர் சன் மியூசிக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.
குறிப்பாக அதில் இவர் தொகுத்து வழங்கிய கிரேஸி கண்மணி என்கிற நிகழ்ச்சி தியாவுக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது. சன் டிவியில் வணக்கம் தமிழா, சூப்பர் சேலஞ்ச், சவாலே சமாளி போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி இருந்தார். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்பிரமணியம் என்பவரை திருமணம் செய்து கொண்டார். 3 ஆண்டுகள் உருகி உருகி காதலித்து தியாவை கரம்பிடித்தார் கார்த்திக்.
கார்த்திக் சிங்கப்பூர் சிட்டிசன் ஆவார். அது மட்டுமின்றி சிங்கப்பூரில் மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியிலும், கார்த்திக் விளையாடி உள்ளார். தற்போது, சிங்கப்பூரில் செட்டிலான இவர் தனது மகளுக்கு முருகர் வேடம் இட்டு கலக்கல் போட்டோ சூட் ஒன்றை நடத்தியுள்ளார்.
தைப்பூச தினத்தில் அவர் போட்டோக்களை வெளியிட ரசிகர்கள் அதிகப்படியான லைக்ஸ்களை குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.