லீக்கான மார்பிங் வீடியோ.. வேதனையுடன் விளக்கம் கொடுத்த தொகுப்பாளினி..!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி. அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

இவர் 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரான ரோகித்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், அவர் நடக்க முடியாமல் செவிலியர்கள் உதவியுடன் நடந்து வருகிறார். அது குறித்து அவர் கூறியதாவது:- தான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது.

சிறிது காலம் நலமாக இருந்தேன். அதன் பிறகு தான் எனக்கு நவியா பிறந்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் என் முதுகு தண்டுவட நிபுணருடன் ஆலோசனை செய்தேன். அப்போது அவர் இதற்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை. இதனால், இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.

வேறு ஒருவருடைய முதுகுஎழும்பை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த முறை குணமடைய வெகு நாட்கள் ஆகும். என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நிற்கிறார். எனது ஐந்து வயது மகள் நவியா என் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரது ரசிகர்கள் கமெண்டில் தற்போது ஆறுதலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கல்யாணி உடல் நிலை குறித்து இணைய தளங்களில் வதந்தி பரவியது. இதற்கு மறுப்பு தெரிவித்து கல்யாணி வெளியிட்டுள்ள இன்னொரு வீடியோவில் “எனது உடல்நிலை குறித்து தவறான தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். மருத்துவமனையில் இறந்த யாரோ ஒருவரின் உடம்பில் எனது முகத்தை மார்பிங் செய்து ஒட்டி உள்ளனர். எனது உடல் நிலை குறித்து தவறான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். தயவு செய்து இப்படி செய்யாதீர்கள்” என்று கூறியுள்ளார்.

Poorni

Recent Posts

விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி

மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…

1 day ago

உண்மையிலே அதிமுகவை பாராட்டியே ஆகணும்… திருமாவளவன் திடீர் டுவிஸ்ட்!

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…

1 day ago

டிராகன் படத்துக்கு போனேன், கடுப்பேத்திட்டாங்க- ஆதங்கத்தை கொட்டிய நடிகர் ஸ்ரீகாந்த்…

மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…

1 day ago

உடலுறவு என்பது மகிழ்ச்சிக்காக.. குழந்தை பெற்றுக்கொள்ள அல்ல : பிரபல நடிகை அதிரடி கருத்து!

அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…

1 day ago

வக்பு மசோதாவுக்கு கனிமொழி, திருச்சி சிவா மறைமுக ஆதரவு? தம்பிதுரை எம்பி பரபரப்பு குற்றச்சாட்டு!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…

1 day ago

பழைய மதுரையை உண்மையில் உருவாக்கி வரும் சிவகார்த்திகேயன் படக்குழு? அடேங்கப்பா!

பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…

1 day ago

This website uses cookies.