மகாலக்ஷ்மியின் முதல் கணவரை விவாகரத்து செய்ய இதுதான் காரணமா?.. அடுத்தடுத்து வெளியாகும் சர்ச்சை..!

Author: Vignesh
20 April 2023, 1:00 pm

பிரபல சின்னத்திரை நடிகையான மகாலட்சுமி கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி தனது காதலரான தயாரிப்பாளர் ரவீந்தரை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே விவாகரத்தான மகாலட்சுமிக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். முதல் கணவரை விவாகரத்து செய்த பிறகு சீரியல் நடிகர் ஈஸ்வரை மகாலட்சுமி காதலிப்பதாக தகவல் பரவியது.

ஆனால் ஈஸ்வரும் தானும் நண்பர்கள்தான் என்று கூறிய மகாலட்சுமி அதன்பிறகு எந்த கிசுகிசுவிலும் சிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் ரவீந்தர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு என்ற படத்தில் நடித்தபோது அவருடன் மகாலட்சுமிக்கு காதல் மலர்ந்தது. இரண்டு ஆண்டுகளாக தனது காதலை ரகசியமாக வைத்திருந்த அவர்கள் கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.

ரவீந்தரை மகாலட்சுமி பணத்திற்காகதான் திருமணம் செய்து கொண்டார் என விமர்சனங்கள் எழுந்தன. மேலும் மகாலட்சுமி என்ன ஷேர் செய்தாலும் அதனை விமர்சிக்க காத்திருந்தனர் நெட்டிசன்கள். இந்நிலையில்

இதனிடையே, மகாலக்ஷ்மி ஏற்கனவே அனில்குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார் என்பதும் இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார் என்ற தகவலும் நாம் அறிந்த ஒன்றே. இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு அனில்குமாரை மகாலக்ஷ்மி பிரிந்தார்.

mahalakshmi-raveendar-updatenews360

குடும்பப் பிரச்சனையால் இனி சேர்ந்து வாழ முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டதால் இருவரும் விவாகரத்து பெற்று கடந்த 2 ஆண்டுகளாக ரவீந்தரை காதலித்து வந்த மகாலக்ஷ்மி மகனின் சம்மதத்துடன் அவரை கரம்பிடித்ததாக தெரிவித்துள்ளார்.

mahalakshmi - updatenews360

கணவரை பிரிந்ததும் ரவீந்தர் மீது காதல் வந்ததா அல்ல ரவீந்தர் மீது காதல் வந்ததால் முதல் கணவரை பிரிந்தாரா என்ற புதிய சர்ச்சையை நெட்டிசன்கள் கிளப்பிஉள்ளனர்.

இவர்களின் திருமண செய்தி வந்ததில் இருந்து சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாமல் தொடர்கின்றது. எனினும், அதை எல்லாம் கடந்து இருவரும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?