தங்கத்துல தக தகனு மின்னிய VJ மஹாலக்ஷ்மி !

Author: Udayachandran RadhaKrishnan
2 September 2022, 10:31 pm

சன்.டி.வியில் செல்லமே, இளவரசி, முந்தானை முடிச்சு, விஜய் டிவியில் அவள், ஜெயா.டி.வியில் இருமலர்கள், என்று பல சீரியல்களில் பிஸியாக நடித்து வருபவர் மகாலட்சுமி.

இவர், சன் மியூசிக்கில் ஜாலியாக காம்பயரிங் செய்ய ஆரம்பிச்சதுல தொடங்கிய பயணம் இப்ப சீரியல் வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. எப்போதும் தலையை ஆட்டி ஒரு நபருடன் போன்ல பேசி ஒரே மாதிரி காம்பியர் பண்றது, அலுத்துப்போச்சு.. அதுக்கப்புறம் தான் சீரியலில் நடிக்க ஆரம்பிச்சதாக கூறியுள்ளார்.

தற்போது நேற்று முதல் சமூக வலைதளங்களில் முழுக்க இவரின் கல்யாண போட்டோக்கள் தான் குவிந்த வண்ணமாக இருக்கிறது. லிப்ரா பட நிறுவனர் ரவீந்திரன் அவர்களை திருமணம் செய்துள்ளார். இதை சிலர் காசு பணத்துக்காக மஹா இப்படி முடிவெடுத்து உள்ளதாக வாய்க்கு வந்தபடி கண்டபடி பேசுறாங்க.. ரொம்ப தப்புங்க, இப்படி பேசுறது, காதல்னா வாழுறதுல தான் இருக்கு என்று இன்னொரு பக்கம் இவர்களுக்கு ஆதரவும், வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் ஆக இருக்கிறது.

இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்க ஆபரணங்களால் நிரம்பி வழிந்த கல்யாண புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். தங்க சிலை என்று வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Tamannaah Bhatia and Vijay Varma part ways after years of dating காதலரை பிரிந்தார் நடிகை தமன்னா.. இதுக்கும் அவருதான் காரணமா? இன்ஸ்டா பதிவால் பரபர!