அட விஜே மகேஸ்வரியின் மகனா இது..! இவ்வளவு பெரிய பையனா வளர்ந்துட்டாரே..!

Author: Vignesh
6 February 2023, 5:30 pm

பல நிகழ்ச்சிகளில், பல சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் இரண்டு பேர் மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அதில் ஒன்று DD, இன்னொன்று சன் டிவி Vj மகேஸ்வரி.

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் மகேஸ்வரி. சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார், குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சென்னை 28 – 2 வில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.

தற்போது, இளம் வயதில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் இப்போது ஏன் இவ்வளவு கவர்ச்சி காட்டுகிறார் என்று தெரியவில்லை. ஆனால் இதையெல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் வழக்கம் போல் விதவிதமான கவர்ச்சி ஹாட், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

திருமணமாகி ஒரு மகன் இருக்கையில் சில கருத்து வேறுபாடு காரணமாக ஒரே வருடத்தி விவாகரத்து பெற்று மகேஸ்வரி தனியாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட மகேஸ்வரி சில வாரங்களிலேயே வீட்டில் இருந்து வெளியேற்றபட்டார்.

அதன்பின் நிகழ்ச்சி முடிந்து அசீம் டைட்டில் வின்னரானது, அவருக்கு எதிராக வெளிப்படையான கருத்தினை தெரிவித்தார். இந்த சம்பவம் பெரியளவில் பேசப்பட்டது.

இந்த நிலையில் விஜே மகேஸ்வரி தன்னுடைய மகனின் புகைப்படத்தை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் பாராட்டியும் ஆதரவான கருத்தையும் தெரிவித்தும் வருகிறார்கள்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி