இங்க தெரிது.. அங்க தெரிதுன்னு சொல்லுவாங்க.. கவர்ச்சி குறித்து வெளிப்படையாக பேசிய VJ மகேஸ்வரி..!

தமிழ் சினிமாவின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலம் ஆகினார். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது.

விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது ரோல் பிரபலமானதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக்கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்களிடையே பேமஸ் ஆனார்.

தற்போது 36 வயதாகும் மகேஸ்வரி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி தற்போது தனது இரண்டாம் திருமண ஆசை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார். அதாவது,

“எனக்கும் சில தேவைகள் இருக்கு. ஆனால் இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. காரணம்,வருகிற நபர் எனக்கு கணவராக இருப்பார். ஆனால், அவர் என் மகனுக்கு அப்பாவாக மாறக்கூடிய மனநிலையில் இருப்பாரா? இதெல்லாம் உண்மையிலே நடக்குமா? என்ற பயம் எனக்கு இருக்கிறது.

மேலும் படிக்க: துளி கூட Makeup இல்லாமல் இருக்கும் ரம்யாகிருஷ்ணன்.. என்ன அழகு டா; இவங்களுக்கு 53 வயதா?.. (Video)

ஏனென்றால், என் மகன் என்னை நம்பி தான் இருக்கிறான். என்னை மறுமணம் செய்துக்கொள்ள இரண்டு பேர் கேட்டார்கள். திருமணம் செய்துக்கொள்ள விருப்பத்தையும் தெரிவித்தார்கள்.ஆனால் ஏற்கனவே என் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டதால் மறுமணம் என்பது சரியாக வருமா?என பெரும் குழப்பம் மனதில் உள்ளதாக அவர் கூறினார்.

மேலும் படிக்க: கோடி ரூபாய் கொடுத்தாலும் NO.. இந்த விஷயத்தில் கறார் காட்டும் சாய் பல்லவி..!

மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதற்கான காரணத்தை கூறிய அவர் தனக்கு சிறுவயதில் இருந்து அழகான ஆடை அணிவது மிகவும் விருப்பம் இருக்கிறது. எனக்கு நயன்தாரா மிகவும் பிடிக்கும் அவர்களை மாதிரி நானும் அழகாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. இனி நான் வாழப் போகும் காலகட்டத்தில் எனக்கு பிடித்ததை செய்யவே விரும்புகிறேன் என்று மகேஸ்வரி தெரிவித்து இருந்தார்.

மேலும், கிளாமர் போட்டோஷூட் பற்றி நிறைய கமெண்ட்களை நான் பார்க்கவே மாட்டேன். எங்கே போனாலும் கமெண்ட் போட தான் செய்வாங்க, சேலை கட்டினாலும் சரி. இங்க தெரியுது அங்க தெரியுதுன்னு தான் சொல்லுவாங்க, இந்த கமெண்ட் எல்லாம் ஒரு சதவீதம் கூட பயன் கிடையாது. நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என் மகனுக்கு அது பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. ஒரு ஆணிடம் இந்த சீன் பண்ணலாமா என்று கேட்க முடியுமா? மேலும், என் மகனுக்கு என் அம்மாவுக்கு ஏதாவது பிரச்சனையாக இருந்தால், நான் அது பற்றி விவரிப்பேன். அது கஷ்டமாக இருந்தால் நான் யோசிப்பேன். வேறு யாருக்கும் கஷ்டமாக இருந்தால் எனக்கு பிரச்சனை இல்லை என்று வெளிப்படையாக VJ மகேஸ்வரி பேசியுள்ளார்.

Poorni

Recent Posts

அண்ணாமலை இருக்கும் வரைக்கும் பாஜகவுக்கு ரிசல்ட் பூஜ்ஜியம்தான்… பிரபலம் போட்ட பதிவால் பரபரப்பு!

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…

8 hours ago

என் அடுத்த படத்தை நீங்களே டைரக்ட் பண்ணுங்க- பிரபல இயக்குனரிடம் தானே முன் வந்து கேட்ட அஜித்!

குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…

9 hours ago

உயிரை காவு வாங்கிய பங்குச்சந்தை…பல லட்சம் இழப்பு : வாலிபர் விபரீத முடிவு..!!

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…

10 hours ago

கிராமத்து படத்துக்கு இசையமைக்கப்போகும் அனிருத்? ஆஹா இது ரொம்ப புதுசா இருக்கே!

ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…

10 hours ago

ஐடி துறைக்கு வந்த பேரிடி… அமெரிக்க வர்த்தக போரால் ஐடி ஊழியர்களுக்கு ஆப்பு?!

அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…

10 hours ago

லோகேஷ் கனகராஜை பார்த்து சூடு போட்டுக்கொண்ட ஆர்ஜே பாலாஜி! திடீரென மயங்கி விழுந்த பெண்?

சூர்யா 45  “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…

11 hours ago

This website uses cookies.