Physical Need வேணும்… இரண்டாம் திருமணம் குறித்து மனம் திறந்த பிரபல VJ..!

Author: Vignesh
11 மே 2024, 2:50 மணி
vijay tv vj
Quick Share

தமிழ் சினிமாவின் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே மகேஸ்வரி ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தொடர்ந்து பல்வேறு சின்னத்திரை நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலம் ஆகினார். அதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் தேடி வந்தது.

vj maheshwari - updatenews360

விக்ரம், மகான், சாணி காகிதம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவரது ரோல் பிரபலமானதாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து கிடைக்கும் பட வாய்ப்புகளில் நடித்துக்கொண்டே நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இதனிடையே இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்டு மக்களிடையே பேமஸ் ஆனார்.

தற்போது 36 வயதாகும் மகேஸ்வரி திருமணம் ஆகி விவாகரத்து ஆனவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். கணவரை பிரிந்து மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் மகேஸ்வரி தற்போது தனது இரண்டாம் திருமண ஆசை குறித்து வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது, “எனக்கும் சில தேவைகள் இருக்கு. எமோஷன் இருக்கு… இன்னும் ஓபன்னாக சொல்லவேண்டும் என்றால் எல்லாருக்கும் Physical Need என்பது ஒன்று இருக்கிறது. யாராவது ரோட்டில் கை கோர்த்து செல்லும் போது எனக்கு கஷ்டமாக இருக்கும். ஆனால், இரண்டாம் திருமணம் செய்துக்கொள்ள மிகவும் பயமாக இருக்கிறது. காரணம்,வருகிற நபர் எனக்கு கணவராக இருப்பார். ஆனால், அவர் என் மகனுக்கு அப்பாவாக மாறக்கூடிய மனநிலையில் இருப்பாரா? இதெல்லாம் உண்மையிலே நடக்குமா? என்ற பயம் எனக்கு இருக்கிறது.

ஏனென்றால், என் மகன் என்னை நம்பி தான் இருக்கிறான். என்னை மறுமணம் செய்துக்கொள்ள இரண்டு பேர் கேட்டார்கள். திருமணம் செய்துக்கொள்ள விருப்பத்தையும் தெரிவித்தார்கள்.ஆனால் ஏற்கனவே என் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டதால் மறுமணம் என்பது சரியாக வருமா?என பெரும் குழப்பம் மனதில் உள்ளதாக அவர் கூறினார்.

  • THIRUMA AND VIJAy ஒரே மேடையில் திருமாவளவன் – விஜய்.. கூட்டணிக்கான அஸ்திவாரமா?
  • Views: - 246

    0

    0