7 மாதம் கர்ப்பிணியாக இருக்கும் மணிமேகலை – வைரலாகும் Baby Bump வீடியோ!
Author: Shree10 March 2023, 9:35 pm
பிரபல தொகுப்பாளினியான விஜே மணிமேகலை விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மூலை முடுக்கெங்கும் உள்ள தமிழக மக்களிடையே பேமஸ் ஆகிவிட்டார்.
ரியாலிட்டி ஷோவில் கலந்துக்கொண்டு வருமானம் சம்பாதிப்பதை விட யூடியூப் சேனல் மூலம் பல லட்சம் வருமானம் சம்பாதித்து சொகுசு கார், விவசாய நிலம், வீடு என கிடு கிடுவென வளர்ந்துவிட்டார்.
இந்நிலையில் திடீரென விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார். அதற்கான காரணம் அவர் வெளிப்படையாக கூறாத நிலையில் ஆளாளுக்கு ஒன்னு பேசி வந்தனர்.
அண்மையில் நிலத்தில் பூமி பூஜை போட்ட வீடியோ இணையத்தில் வெளியாக, அதில் அவரது வயிறு 7 மாசம் கர்ப்பிணி வயிறு போல் உள்ளது. இதையடுத்து மணிமேகலைக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள். வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்: