நான் எடுத்த முடிவு தவறு… உசைன் மீதுள்ள காதல் குறித்து மணிமேகலை உருக்கம்!

Author: Shree
27 March 2023, 7:03 pm

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார்.

ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக கொரோனா லாக் டவுனில் சொந்த ஊர் கிராமத்திற்கு சென்று கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

இந்நிலையில் மணிமேகலை பேசிய பழைவிடேவ் ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. அதில் நாங்கள் இருவருமே இத்தனை வருஷத்தில் உன்னை நான் கல்யாணம் பண்ணியிருக்கக்கூடாது. அப்படி செய்ததது தவறு என எந்த ஒரு சூழ்நிலையிலும் நினைத்ததில்லை என்றார். இருவருக்கும் இடையில் இருக்கும் நிறைய புரிதல் உள்ளது. அது தான் நம் காதல் காலங்கள் கடந்தும் நம்மை பயணிக்க வைக்கிறது என்றார்.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!