தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வருபவர் விஜே மணிமேகலை. இவர் 2000 காலகட்டத்தின் நடுப்பகுதியில் சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பேமஸ் ஆகி வந்தார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று மிகப்பெரிய அளவில் பேமஸானார் விஜே மணிமேகலை.
அந்த நிகழ்ச்சியில் இவரது காமெடியான நடவடிக்கைகள் எல்லோரது கவனத்தையும் ஈர்த்து பிரபலமானதை அடுத்து CWC நிகழ்ச்சி தொகுப்பாளியாகவே இருந்து வருகிறார். இதனிடையே இவர் உசைன் என்ற டான்சரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட விஜே மணிமேகலை கணவருடன் தனியாக வாழ்ந்து வந்தார்.
இதனிடையே அவரது தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதனிடையே விஜே மணிமேகலைக்கு தொகுப்பாளினி பிரியங்கா உடன் கடுமையாக சண்டை போட்டி நிலவியது. இதனால் மணிமேகலை நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் இருந்து வெளியேறிவிட்டார்.
இதனால் மீண்டும் சர்ச்சை கிளப்பி இருந்தது. இந்த சீசன் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளதால் பிரியங்கா தேஷ்பாண்டே வெற்றியாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது என கூறுகிறார்கள். ஏற்கனவே மணிமேகலை விவகாரம் பெரும் விவாதமாக மாறி இருக்கும் நிலையில் பிரியங்கா ஒரு வேலை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டால் அதன் விமர்சனங்கள் கடும் மோசமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இப்படி இந்த விஷயம் பெரும் பரபரப்பையும் சர்ச்சையும் ஏற்படுத்தி வரும் நிலையில் மணிமேகலை குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சிக்காக வாங்கிய சம்பள விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதாவது, ஒரு எபிசோடுக்கு ரூ. 60 ஆயிரம் சம்பளமாக வாங்கி இருக்கிறார் மணிமேகலை.
இதையும் படியுங்கள்:என்னமா இப்படி இறங்கிட்டியேமா? ஹோம்லியா இருந்த ஷிவாங்கி மாலத்தீவில் மஜா ஆட்டம்!
அதுவே இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு பெற்றிருக்கும் பிரியங்காவின் சம்பளம் ரூ. 20,000 என்பதாக கூறப்படுகிறது. அதே போல ஒரு ஷோவிற்கு அவர் ரூ. 18000 சம்பளம் ஆக பெறுகிறார் எனவும் கூறப்படுகிறது.
வழக்கமாக விஜய் டிவியில் பிரியங்கா ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மட்டும் ஒரே ஒரு எபிசோடுக்கு ரூ. 2 முதல் 2.5 லட்சம் வரை சம்பளம் பெறுகிறார். ஆனால் அவருக்கு சமையல் மீது இருந்த ஈடுபட்டால் தான் சம்பளத்தை குறைத்துக் கொண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதாக கூறுகிறார்கள்.