வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா….. பிரம்மாண்டமாக கனவு வீடு கட்ட துவங்கிய மணிமேகலை!

Author: Shree
25 May 2023, 11:52 am

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

vj manimegalai

அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக கொரோனா லாக் டவுனில் சொந்த ஊர் கிராமத்திற்கு சென்று கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

இந்நிலையில் மணிமேகலை சில வருடங்களுக்கு முன்னர் கிராமத்தில் பெரிய இடம் வாங்கி இருந்தார். தற்போது அந்த இடத்தில் பிரம்மாண்டமாக தனது கனவு வீட்டை கட்ட துவங்கியுள்ளார். அதன் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு “எனது பண்ணை வீட்டின் தூண் – என் வலதுபுறம் என் வாழ்வின் தூண் – என் இடதுபுறம்” என கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கும் அவரது வளர்ச்சிக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

  • anthanan funny criticize on good bad ugly movie ரசிகர் மன்றத் தலைவர் எடுத்த படம் மாதிரி இருக்கு- GBU-வை கண்டபடி கலாய்த்த பிரபலம்