படுத்த படுக்கையாக விஜே மணிமேகலை… மோசமான நிலையில் வெளியிட்ட புகைப்படம்!

Author: Shree
9 October 2023, 9:48 am

பிரபல தொலைக்காட்சியான சன் மியூசிக்கில் 2009 முதல் 10 ஆண்டுகளுக்கும் மேலாக, தொகுப்பாளினியாக வலம் வந்தவர் விஜே மணிமேகலை. அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஜொலிக்க ஆரம்பித்தார். ஃபிரியா விடு, வெட்டி பேச்சு என அவர் தொகுத்து வழங்கிய நிகச்சிகள் எல்லாமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து உசைன் என்பவரை பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2017ஆம் ஆண்டு, திருமணம் செய்து கொண்டார்.

அதன் பிறகு சொந்தமாக யூடியூப் சேனல் துவங்கி நிறைய வீடியோக்களை பதிவிட்டு வந்தார். குறிப்பாக கொரோனா லாக் டவுனில் சொந்த ஊர் கிராமத்திற்கு சென்று கணவர் ஹூசைனுடன் சேர்ந்து சொந்த ஊருக்கு சென்று, அங்கு தினசரி நடப்பவற்றை வீடியோ எடுத்து, யூடியூபில் போட்டது பெரும் வரவேற்பை பெற்று கிடுகிடுவென வளர்ந்துவிட்டார்கள்.

இந்நிலையில் மணிமேகலை காலில் அடிபட்டு படுத்த படுக்கையாகவே இருக்கிறார். தரையில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி புகைப்படத்தை பதிவிட்டு நான் எழுதிருக்கவே முடியாத நிலையில் இருப்பதாகவும் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் எல்லோரும் வருத்தமடைந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • fear was more when doing ajith project அஜித் சார் படம்,பயம்தான் அதிகமா இருந்தது- ஆதிக் ரவிச்சந்திரன் ஓபன் டாக்…