என்னது உங்களுக்கு குழந்தை பிறக்கப்போகுதா? திடீரென வீடியோ வெளியிட்டு ஷாக் கொடுத்த VJ மணிமேகலை!
Author: Shree16 May 2023, 9:10 am
பிரபல தொகுப்பாளினியான மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை ஷோ, யூடியூப் என கிடுகிடுவென வளர்ந்துவிட்டார். இவர் வீட்டை எதிர்த்து உசைன் என்பவரை மத மறுப்புத் திருமணம் செய்து கொண்டு கணவருடன் வசித்து வருகிறார். இதனிடையே அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஜாக்பாட் அடித்தது போல் அவரது வாழ்க்கையை உயர்த்தி நிறுத்தியது.
இதனிடையே திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து தான் வெளியேறுவதாக அறிவித்து பேரதிர்ச்சி கொடுத்தார். அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதை பலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இதனால் மணிமகேலை கர்ப்பமாக இருப்பதாக வதந்திகள் வெளியானது.
இந்நிலையில் தற்போது அதை நிரூபிக்கும் வகையில் லேட்டஸ்ட் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் வெளியிட அதில் படு குண்டாகி ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிபோயிருகிறார். இதனால் அவர் நிச்சயம் கர்ப்பமாக தான் இருக்கிறார் என ரசிகர்கள் உறுதியாக கூறிவருகிறார்கள்.
https://www.instagram.com/reel/CsQ_Di4uYy_/?utm_source=ig_embed&utm_campaign=loading