A சான்றிதழ் கொடுத்தும் வசனங்கள் MUTE ஏன்? சரமாரியாக கேள்வி கேட்ட பிரபலம்…!

Author: Selvan
21 December 2024, 3:14 pm

vj பார்வதியின் கேள்விகள் – வெற்றிமாறனுக்கு ஆதரவு

வெற்றிமாறன் இயக்கத்தில் நேற்று விடுதலை2 வெளியாகி,ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.படத்தில் பல காட்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கும் விதமாக இடம்பெற்றுள்ளது.

VJ Parvathy Instagram video about viduthalai2

இந்நிலையில் படம் பார்த்த வி.ஜே.பார்வதி சென்சார் போர்டினை பார்த்து பல கேள்விகள் எழுப்பி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியது படத்தில் வரக்கூடிய வசனங்கள்,கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் சமூகத்தில் நடக்கூடியது தான் சொல்லி இருக்கிறார்கள்,அப்படி இருக்கையில் படத்திற்கு ஏற்கனேவே A சான்றிதழ் கொடுத்துள்ள நிலையில் ஏன் வார்த்தைகளை மியூட் செஞ்சீங்க என கேட்டுள்ளார்.

இதையும் படியுங்க: விக்னேஷ் சிவன் ஒரு தலையாட்டி பொம்மை..நயன்தாரா சினிமாவிற்கு சாபக்கேடு…விலாசும் பிரபலம்..!

அதே மாதிரி படத்தில் வரக்கூடிய “தேசிய இன விடுதலை” வசனத்தையும் எடுக்க சொல்லியுள்ளார்கள் இந்திய திரைப்பட தணிக்கை குழு,இதனை எதிர்த்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி நீங்கள் செய்யறதுனால மீண்டும் மீண்டும் விடுதலை2 படத்தை பார்க்க வேண்டும்,அந்த படத்தை பார்த்த பிறகு நிஜ அரசியலை புரிந்து கொள்ள வேண்டும் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில் நன்றி வெற்றிமாறன் தோழர் என கேப்சனையும் பதிவிட்டுள்ளார்.

  • ajith kumar changed the lyrics of god bless u song in good bad ugly அது வேண்டாம் இதை வச்சிக்கோ- இந்த பாடல் வரியை மாற்றியது அஜித்தா?