ராமரை திட்டி விஜே பிரியங்கா சொன்ன “அந்த” இரட்டை அர்த்த வார்த்தை.. கைத்தட்டி சிரித்து சிக்கலில் மாட்டிய பயில்வான்..!

Author: Vignesh
14 February 2023, 4:30 pm

விஜய் டிவி நிகழ்ச்சி என்றாலே அதற்கு வரவேற்பும் மக்கள் ஆதரவும் அதிகம். அந்த வகையில், நகைச்சுவை, கலகலப்புக்கு பஞ்சமின்றி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி Oo Solriya Oo Oohm Solriya. இந்நிகழ்ச்சியை பிரியங்கா மற்றும் மாகாபா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கி வருகின்றனர்.

இந்த நிகழ்ச்சியில், விஜய் டிவி நட்சத்திரங்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பங்கேற்று வருகின்றனர். அந்த வகையில், தற்போது, ராமர், பயில்வான் ரங்கநாதன் மற்றும் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது காமெடியாக பேசிக்கொண்டிருந்த சமயம், திடீரென நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் பேசிக்கொண்டிருந்த ராமர், பிரியங்காவின் கழுத்துக்கு கீழே உள்ள செயின் டாலரில் கைவைத்துவிடுகிறார்.

இதை பார்த்த அறந்தாங்கி நிஷா உடனடியாக ராமரை கண்டித்து அடிக்கிறார். ராமர் விளையாட்டாக செய்த இந்த விஷயத்தை பார்த்த ரசிகர்கள் ‘இப்படியொரு தவறான செயலை ராமரிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை’ என்று கமெண்டில் கூறி வருகிறார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலானது.

YouTube video player

இந்நிலையில், பயில்வான், ராமர், அரந்தாங்கி நிஷா கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் மொக்கையாக பேசிய ராமரை பிரியங்கா கலாய்த்துள்ளார்.

இதினிடையே, பொறுமையை இழந்த விஜே பிரியங்கா, ரோஜா பூ மாலை என்ற இரட்டை அர்த்த வசனத்தை கூறி ராமரை திட்டியதற்கு, பயில்வான் ரங்கநாதன் கைத்தட்டி விடாமல் சிரித்து உள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் தற்போது இணையதளத்தில், வைரலாகி வருவதோடு பொது நிகழ்ச்சியில் இப்படியா பேசுவது என்று பிரியங்காவை திட்டியும், ஒரு பெரிய மனுஷன் நீங்களாவது கேட்டு இருக்கலாம் அத விட்டுட்டு இப்படி கைதட்டி சிரிக்கிறீங்க என்று பயில்வான் ரங்கநாதனை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகிறார்கள்.

என்ன ராமர் அய்யா இப்படி ஆயிடுச்சு ? | Varoo Aana Varaadhu | Unseen
  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?
  • Close menu