15 வருட பயணம்… ரசிகையின் பதிவை பார்த்து எமோஷ்னல் ஆன VJ பிரியங்கா!

Author: Rajesh
13 February 2024, 8:57 pm

யாரையும் முகம் சுளிக்க வைக்காமல், அடுத்தவர் மனதை நோகடிக்காமல் கலகலப்பாக பேசி எல்லோரையும் மகிழ்விப்பவர் விஜே பிரியங்கா. இவர் விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

vj priyanka-updatenews360

பிரியங்காவின் காமெடி பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

அதன் பின் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொடர்ந்து தொகுத்து வழங்கி அனைவரது மனதிலும் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார். இந்நிலையில் பிரியங்கா இந்த துறையில் 15 ஆண்டுகளாக சிறந்து விளங்கி வருகிறார். இது குறித்து அவரது தீவிர ரசிகை ஒருவர், 15 வருடமாக பிரியங்காவின் பயணம் இன்று வரை அதே வசீகரத்தோடும், அதே மோகத்தோடும், அதே போற்றுதலோடும் தொலைக்காட்சி துறையில் கொண்டாடுவோம். அது சுலபமா? வெற்றி மட்டும் தான் உலகிற்கு தெரியும். ஆனால், அவள் வந்த வழி முழுவதும் சிம்மாசனங்களும் கற்களும் நிறைந்தது என கூறி அழகாக பாராட்டி வர்ணித்துள்ளார்.

vj Priyanka

இதை பார்த்து மிகவும் எமோஷ்னலான பிரியங்கா, “ஜெனி உன் வார்த்தைகளுக்காக நான் சிக்கிக்கொண்டேன். எதுவாக இருந்தாலும் நீங்கள் எப்போதும் அங்கேயே இருந்திருக்கிறீர்கள். நான் ஒரு நிகழ்வில் இருக்கிறேன், இதைப் படித்து நான் மிகவும் வியப்படைகிறேன். இதைப் படித்தவுடன் இனியும் கூடுதல் மகிழ்ச்சி ஆக என் வேலையை செய்யவுள்ளேன். நான் உன்னை அதிகமாக நேசிக்கிறேன், ஏனென்றால் நான் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டேன்.நன்றி என பதிலளித்துள்ளார்.

  • Annamalai vs Cool Suresh Whip Trendஅண்ணாமலையை தொடர்ந்து கூல் சுரேஷ் சாட்டையடி… வைரலாகும் வீடியோ..!
  • Views: - 370

    0

    0