அந்த தப்பை இனி செய்யக் கூடாது.. VJ பிரியங்காவால் கண்ணீர் விட்ட அம்மா..!
Author: Vignesh16 January 2024, 11:13 am
விஜய் தொலைக்காட்சியின் டாப் தொகுப்பாளர்களில் ஒருவர் பிரியங்கா தேஷ்பாண்டே. பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் விஜே வாக இருந்து வரும் இவர், கலக்கப்போவது யாரு, சூப்பர் சிங்கர், BB ஜோடிகள் உள்ளிட்ட பல பிரபல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.

பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அப்படி ஜாலியாக இருக்கும் பிரியங்கா, கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். பிரியங்காவின் காமெடி, பேச்சு கலந்து தொகுத்து வழங்குவதற்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதனால், இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

இதனிடையே, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரவீன் குமார் என்பவரை காதலித்து குடும்பத்தினர் அனைவரின் முன்பு திருமணம் செய்து கொண்ட பிரியங்கா ஒரு சில ஆண்டுகளிலேயே கணவரை பிரிந்து அம்மா மற்றும் சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

சமீபத்தில், பிரியங்கா அவரது அம்மாவுடன் பேட்டியில் கலந்து கொண்டு பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், உன் வாழ்க்கையில் பண்ண ஒரு தப்பை மீண்டும் பண்ண கூடாது என்று அம்மா சத்தியம் கேட்டதாகவும், அம்மா கண்ணு கலங்கினால், தனக்கு வேதனையாக இருக்கும். அதை பார்க்க முடியாது. அவர் எனக்கு பெட் ஆப் தி ஃபேமிலி என்று கூறியுள்ளார். மேலும், இதற்கு பிரியங்கா அம்மாவை கஷ்டப்பட வைக்க கூடாது, தலை குனிய வைக்கக்கூடாது என்பது தனக்கு எப்போதும் தோன்றும். தான் ஒரு விஷயத்திற்கு ஆசைப்படுகிறேன் என்றால் அம்மாவுக்கு பிடிக்காமல் இருந்தால் கூட அதை பண்ணால், நான் தப்பு பண்ணிட்டேன் என்று அவரிடம் போகும் போது நீ என்ன பண்ணையோ அதை பண்ணு, பல விஷயங்களை கண்டிப்பாங்க எந்த முடிவுகளிலும் எல்லாவற்றையும் அம்மா கூட இருப்பா என்று பிரியங்கா தனது அம்மா குறித்து பேசி உள்ளார்.