16 வயதில் கேமரா மேன் கொடுத்த டார்ச்சர்…. மீடியா முகத்தை கிழித்த VJ ரம்யா!

Author: Rajesh
24 December 2023, 2:56 pm

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

vj ramya - updatenews360

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

vj ramya - updatenews360

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். இவர் அப்ரஜித் ஜெயராமன் என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டு பின்னர் ஓராண்டில் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய விஜே ரம்யா, எனக்கு 16 வயதாக இருந்தபோது ஒரு நிகழ்ச்சிக்காக ஷூட்டிங் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அன்றைய முன் தினம் நான் வேறொரு நிகழ்ச்சியில் இடைவெளி இல்லாமல் வேலைபார்த்துவிட்டு அடுத்தநாள் இங்கு வந்ததால் என் கண்கள் சிவந்து மிகவும் சோர்வாக காணப்பட்டேன். அதை பார்த்த கேமரா மேன் ” என்ன நைட் ஃபுல் போதையா? பப்பில் ஒரே ஆட்டமா…?

vj ramya - updatenews360

தொப்பை பெரிசா இருப்பதை பார்த்தாலே தெரியுது நல்லா பீர் குடிச்சிருக்கீங்கனு என்றார். அதை கேட்டதும் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. என்ன பதில் சொல்வதென்று கூட தெரியல. அப்போ எனக்கு வெறும் 16 வயசு தான். நான் புஷ் புஷ்ன்னு இருந்தேன். அப்போவே மீடியாவின் பார்வை மிகவும் மோசமாக இருந்தது. அதையெல்லாம் தாண்டி தான் இன்று இந்த இடத்திற்கு வந்துள்ளேன். இப்போ வந்து என்னிடம் யாராச்சும் அப்படி கேட்டால் நிச்சயம் அதற்கு தரமான பதில் கிடைக்கும் என காட்டமாக பேசினார் விஜே ரம்யா.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!