சென்னை கைவிட்டுடுச்சு.. திருப்பி இங்கதான் வரணும்.. VJ ரம்யாவுக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

Author: Vignesh
5 December 2023, 10:15 am

விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.

விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி, பிரியங்கா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் மொழி, ஓ காதல் கண்மணி, மாசு என்கிற மாசிலாமணி, ஆடை, மாஸ்டர் போன்ற பல படங்களை விஜே ரம்யா நடித்து இருக்கிறார்.

VJ-Ramya updatenews360

ஏற்கனவே, சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார். இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார்.

இந்நிலையில், பலரையும் வாழ வைத்துக் கொண்டிருக்கும் சென்னை தற்போது, மிக்ஜாம் புயலால் நிலைக்குழந்து உள்ளது. எப்படி மீழ்வது என்று தெரியாமல் மக்கள் திணறிக் கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையில், சென்னை தன்னை கைவிட்டதாக ரம்யா பதிவிட்டு இருப்பது அவரது நன்றி மறந்ததை காண்பிக்கிறது. இப்போது, வேண்டுமானால் அவரை தெலுங்கானா காப்பாற்றலாம். ஆனால், சென்னை தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. மீண்டும் சென்னைக்கு தானே நீங்கள் திரும்பி வரணும் என நெட்டிசன்கள் காட்டமாக தெரிவித்துள்ளனர்.

  • Nayanthara asked for half of the profits as salary பாதி சம்பளம்.. மீதி பங்கு : லாபத்தில் பங்கு கேட்கும் நயன்தாரா!