பிளாக் ஷீப் YouTube சேனலில் பிராங்க் வீடியோ செய்ததன் மூலமாக மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் பிஜிலி ரமேஷ். குடித்துவிட்டு சாலையில் சென்று கொண்டிருந்த பிஜிலி ரமேஷை பிடித்து பிராங் செய்கிறோம் என்று ஒரு வீடியோ எடுத்து வெளியிட்டனர்.
அந்த வீடியோவில் மிகவும் கலகலப்பாக காமெடிடன் பேசிய பிஜிலி ரமேஷ் ஓவர் நைட்டில் மிகப்பெரிய அளவில் பிரபலமாகி விட்டார். எந்த குடியால் அவர் சினிமாவில் நடிகராக அறிமுகமானாரோ அதே குடிபோதையால் நேற்று அவர் உயிரிழந்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
ஆம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக குடி போதைக்கு அடிமையாகி படுத்த படுக்கையாக இருந்து வந்த பிஜிலி ரமேஷ் பின்னர் சிகிச்சை பலன் நேற்று திடீரென மரணம் அடைந்தார். ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நட்பே துணை படத்தின் மூலமாக காமெடி நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார் பிஜிலி ரமேஷ்.
தொடர்ந்து பொன்மகள் வந்தால், ஆடை ,கோமாளி, ஜாம்பி உள்ளிட்ட பல திரைப்படங்களை சின்ன சின்ன கதாபாத்திரங்களை ஏற்று மிகச் சிறந்த காமெடியை வெளிப்படுத்தி நடித்து மக்களின் மனம் கவர்ந்த நடிகராக இருந்து வந்தார். இதனிடையே சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு 9 மணி அளவில் உயிரிழந்தார் பிஜிலி ரமேஷ். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகர் பிஜிலியின் மரண செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த பல திரைத்துறை நட்சத்திர பிரபலங்கள் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.அந்த வகையில் பிஜிலியை முதன் முதலில் பிராங்க் வீடியோ மூலம் அறிமுகம் செய்து வைத்த பிரபல youtuber ஆன விஜே சித்து நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சித்துவிடம் ஒரு செய்தியாளர்… காலையிலிருந்து நின்று கொண்டிருக்கிறோம் ஏதாவது கன்டென்ட் கொடுத்துவிட்டு போங்க என்று கலாய்த்தபடி கேட்டார்.
அதற்கு கடுப்பான விஜே சித்து சாவு வீட்டில் கூட கன்டென்ட் கேக்குறீங்களே… உங்களுக்கு அறிவு ஏதாச்சும் இருக்குதா? தப்பா பேசுறீங்க… நாங்க கண்டெண்டுக்காக இங்க வரல… நாங்க அவரோட சேர்ந்து பயந்துள்ளோம். அப்புறம் இன்னொரு வார்த்தை சொன்னேங்களே…. உங்களால தான் அவர் வளர்ந்தாரு அப்படின்னு சொல்றீங்க… அப்படி இல்ல… அவங்களோட நேரம் அது… அவங்க வளர்ந்தாங்க.
பிஜிலி ஆள கூட தான் நாங்கள் வளர்ந்திருக்கிறோம் என மிகவும் பெருந்தன்மையோடு பேசி இருந்தார் விஜே சித்து. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் அந்த பத்திரிகையாளர் திட்டி இருப்பதோடு விஜே சித்துவின் இந்த பதிலை பாராட்டி வருகிறார்கள். முன்னதாக பிஜிலி உடல் நலம் சரியில்லாமல் இருந்தபோது சித்து அவருக்கு 50,000 ரூபாய் கொடுத்து உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.