காமெடி என்ற பெயரில் VJ சித்து அடாவடி…குமுறும் நெட்டிசன்கள்..!

Author: Selvan
9 February 2025, 5:02 pm

இளைஞரை அடித்து துன்புறுத்திய VJ சித்து

கடந்த சில வருடமாக சோசியல் மீடியாவில் தன்னுடைய காமெடி வீடியோக்கள் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டவர் VJ சித்து.

இதையும் படியுங்க: சொந்தம் கொண்டாடிய வடிவேல்..புகார் அளித்த கிராம மக்கள்..பதட்டமான சூழ்நிலையில் பரமக்குடி கிராமம்.!

இவர் சமீபத்தில் பொது இடத்தில் ஒரு இளைஞர் ஒருவரை சரமாரியாக தாக்கி காமெடி செய்துள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் தீயாய் பரவி அவரது செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

VJ Siddhu violence in prank

ஆரம்பத்தில் பொது இடங்களில் பிராங் ஷோ செய்து சோசியல் மீடியாவில் பிரபலம் ஆனவர் VJ சித்து,அதன் பிறகு நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை செய்து வந்த அவர்,தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானதை தெரிந்து கொண்ட பின் ஒரு டீமை உருவாக்கி VJ SIDDHU VLOG என்ற யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார்.அதில் அவ்வபோது பல காமெடி வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்றில் ஒருவரை அடித்து மிதித்து காமெடி என்ற பெயரில் மிகவும் கொடுமையாக நடந்துள்ளார்.

இதனை பார்த்த பலரும் VJ சித்து சமீப காலமாக தன்னுடைய விடீயோக்களில் எல்லை மீறுவதாக குற்றம் எழுந்துள்ளது,இதே போன்று வீடியோக்களை தொடர்ந்து சமுக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தால் காவல்துறை அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • Director Selvaraghavan responds to Kamal Haasan கமல் ஆணவப் பேச்சு…தக் லைப் கொடுத்த செல்வராகவன்..!
  • Leave a Reply