ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு இறங்கிட்டியேமா… அந்த விஷயத்தில் எல்லை மீறிய VJ டிடி!

Author:
14 August 2024, 9:06 pm

விஜய் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளியாக இருந்து வருவது தான் VJ டிடி. இவரை ரசிகர்கள் எல்லோரும் டிடி என செல்லமாக அழைப்பார்கள். ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சிறுவர் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் டிடி.

அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் அடி எடுத்து வைத்து ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம் மற்றும் சூப்பர் சிங்கர் டி 20 உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் தொகுத்து வழங்கி பிரபலமான தொகுப்பாளினியாக இவர் இடத்தை பிடித்திருக்கிறார் .

குறிப்பாக பிரபலங்களை வைத்து நேர்காணல் செய்யும் காபி வித் டிடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலமாக திவ்யதர்ஷினிக்கு என தனி ரசிகர்கள் கூட்டமே உருவாக்கி விட்டார்கள். பிரபலமான தொகுப்பாளினியாக ஹீரோயின் ரேஞ்சுக்கு மார்க்கெட் பிடித்து வைத்திருக்கும் டிடி கடந்த 2017 ஆம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பின்னர் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். தற்போது திருமணம் செய்யாமல் 39 வயதாகியும் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிலையில் டிடி சமீபத்தில் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட அது தீயாய் பரவி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் நீங்களா இப்படி? ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சிற்கு கவர்ச்சி காட்டுவதில் எல்லை மீறி போயிட்டீங்களே என விமர்சித்து இந்த புகைப்படங்களை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

  • Keerthy Suresh new glamorous look கவர்ச்சி உடையில் பிரபல நடிகருடன் குத்தாட்டம்…வைரலாகும் கீர்த்தி சுரேஷ் வீடியோ..!
  • Views: - 153

    0

    0