ஷிவாங்கியை காப்பாத்த என்ன எலிமினேட் செஞ்சாங்க?..- குக் வித் கோமாளி குறித்து VJ விஷால் ஓபன் டாக்..!
Author: Vignesh11 April 2023, 4:30 pm
குக் வித் கோமாளி 4வது சீசன் படு ஜோராக தொடங்கியது. விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முடிந்த கையோடு குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொடங்கிவிட்டார்கள். புத்தம்புது போட்டியாளர்கள், கோமாளி சிலர் என தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி வெற்றிகரமாக 20 எபிசோடுகளை கடந்து முடித்துவிட்டது.
இதனிடையே, கடந்த வார நிகழ்ச்சியும் மிகவும் கலகலப்பாக சென்றது, ஆனால் கடைசியில் விஜே விஷால் எலிமினேட் ஆனதால் ரசிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியது.
விஜே விஷால் எலிமினேட் ஆனது குறித்து சிலர் ஷிவாங்கியை காப்பாற்றவே இவர் எலிமினேட் ஆனார் என கூற அதற்கு ஷிவாங்கியும் இன்று காலை ஒரு பதிவு போட்டார். விஜே விஷாலும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில், இருவருக்கும் ஆரம்பத்தில் இருந்தே நல்ல பாண்டிங் இருந்தது.
இப்போது ஒரே நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் தங்களை பற்றி வந்த மீம்ஸ்கள் மற்றும் வதந்திகளை எப்போதும் நாங்கள் கண்டு கொண்டதே கிடையாது என்றும், தாங்கள் இருவருமே எப்போதும் நல்ல நண்பர்களாக இருக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக அனைத்து குக்குகள் மற்றும் கோமாளிகள் எல்லோருமே பெரிய அளவில் ஹார்ட்ஒர்க் செய்கிறார்கள் என வதந்திக்கு முற்றுப்புள்ளியும் வைத்து விட்டார்.