அவரை போல் கணவர் வேண்டும் – பிரபல நடிகர் மீது திரிஷாவுக்கு அப்படி ஒரு ஆசையா?
Author: Shree20 November 2023, 12:02 pm
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார். ஜோடி படத்தின் மூலம் நடிக்க ஆரம்பித்த திரிஷா மௌனம் பேசியதே, சாமி, லேசா லேசா, கில்லி, ஆறு, விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது 40 வயதாகும் த்ரிஷா இன்னும் அதே அழகியோடு பொம்மை போன்றே இருக்கிறார். இவர் சினிமாவில் நடிக்க வந்ததில் இருந்து அவரின் அழகை பார்த்து மயங்கிய நடிகர்கள் பலர் அவரை காதலித்துள்ளனர். ஆனால் திரிஷாவோ சிம்பு மற்றும் ராணாவை காதலித்து பின்னர் பிரிந்துவிட்டதாக வதந்தி செய்திகள் வெளியானது.
இதனிடையே வீட்டில் பார்த்த மாப்பிள்ளை வருண் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்று பின்னர் நின்றுபோனது. கடைசியாக விஜய் உடன் லியோ திரைப்படத்தில் நடித்து லிப்லாக் காட்சிகளில் நடித்து அவருடன் காதல் கிசுகிசுக்கப்பட்டார்.
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னவென்றால், நடிகை திரிஷா தனக்கு எப்படிப்பட்ட கணவர் வேண்டும் என விருப்பத்தை கூறியுள்ளார். அதாவது, ” எனக்கு அஜித் சார் ரொம்ப பிடிக்கும். காரணம் அவர் ஒரு சிறந்த கணவர், சிறந்த அப்பா உண்மையில் அவர் ஒரு ஜென்டில்மேன். அவரை போன்ற ஒருவர் தான் எனக்கு கணவராக வேண்டும். திருமணம் செய்துக்கொண்டு மகிழ்ச்சியாக, அமைதியான வாழ்க்கை வாழவேண்டும். திருமணத்திற்கு பிறகு விவாகரத்து என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அந்த கஷ்டங்களை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது என திரிஷா மனம் திறந்து பேசியுள்ளார்.