விஜயுடன் திரிஷா சென்றால் தப்பா? சும்மா விட மாட்டேன் : பகிரங்க எச்சரிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan23 December 2024, 1:45 pm
கோலிவுட்டில் கிசுகிசுக்களுக்கு பஞ்சமில்லை. அண்மை காலமாக விஜய், திரிஷா குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
விஜய் – திரிஷா குறித்து அண்ணாமலை!
குறிப்பாக சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்காக கோவாவுக்கு விஜய் தனி விமானம் மூலம் சென்றது பேசு பொருளானது. காரணம் உடன் நடிகை திரிஷா சென்ற வீடியோ வைரலானது.
இதையும் படியுங்க: விவாகரத்து கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ஷாக் கொடுத்த சீரியல் நடிகர்!
ஆனால் அந்த விமானத்தில் விஜய்யுடன் கிட்டத்தட்ட 7 பிரபலங்களும் சென்றிருந்தனர். இது பரபரப்பாக பேசப்பட்டாலும், விஜய் திரிஷா குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் இணையத்தில் எழுகிறது.
வெள்ளம் பாதித்த இடங்களை நேரில் பார்க்க செல்லாத விஜய், கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு செல்ல நேரம் இருக்கிறதா? என எதிர்க்கட்சிகளும், நெட்டிசன்களும் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளது.
விஜய், திரிஷாவை விமான நிலையத்தில் சோதனை செய்தது தொடர்பாக வீடியோக்கள், புகைப்படங்கள் எப்படி வெளிவந்தன? என்பது குறித்து விமான போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என அண்மையில் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.