ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?

Author: Shree
30 October 2023, 8:14 pm

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

jawan

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

ஜவான் படத்தின் மாபெரும் வெற்றியால் நயன்தாராவுக்கு பாலிவுட்டில் அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. ஆம், அடுத்ததாக பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பங்ஷலி இயக்கத்தில் உருவாகும் “பைஜூ பவ்ரா” எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படத்தில் ஹீரோவாக பிரபல நடிகர் ரன்வீர் சிங் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்று படங்களை இயக்கி வெற்றிகளை குவித்த சஞ்சய் லீலா பன்சாலி தேவதாஸ், பஜிராவ் மஸ்தானி, பத்மாவத் போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க செய்தவர். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த “கங்குபாய் கத்யவாடி” படமும் மாபெரும் வெற்றிபெற்றது.

இந்த ஹிட் இயக்குனருடன் நயன்தாரா இணைந்திருப்பது பாலிவுட்நடிகைகளையே கொஞ்சம் பொறாமைகொள்ளச்செய்துள்ளது. ராஷ்மிகா, நயன்தாரா உள்ளிட்ட தென்னிந்திய நடிகைகள் பாலிவுட்டில் புகுந்து அக்கட தேசத்து நடிகைகளுக்கு ஆட்டம் கொடுத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். இதனால் நயன்தாரா இனி தமிழ் படங்களில் தலைகாட்டுவது கொஞ்சம் கடினம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவல் என்னெவன்றால், ஜவான் படத்தில் நயன்தாராவுக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது நடிகை சமந்தா தானாம். அட்லீயின் பேவரைட் ஹீரோயின்கள் சமந்தா, நயன்தாரா இருவரும் தான். முதலில் சமந்தா தனக்கு உடல்நிலை சரில்லை என கூறி அப்படத்தில் தன்னால் நடிக்க முடியாது என கூறி விலகிவிட்டார். பின்னர் அட்லீ தன் மாஸ்தான ஹீரோயின் நயன்தாராவை ஓகே பண்ணாராம்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 516

    1

    2