இதைவிட சிறந்த முடிவு எதுவும் இல்லை… சரக்கு பாட்டிலுடன் திருமணநாள் கொண்டாடிய ஹன்சிகா!
Author: Rajesh5 December 2023, 11:48 am
நடிகை ஹன்சிகா ஆரம்பத்தில் பாலிவுட் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தமிழ் சினிமாவில் நடிகை ஹன்சிகா பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். முன்னதாக, 2011-ம் ஆண்டு நடிகை ஹன்சிகா விஜய் நடிப்பில் வெளியான வேலாயுதம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், தமிழ், தெலுங்கு என இரண்டு மொழி படங்களிலும் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து அசத்தி உள்ளார்.

இதனிடையே அண்மையில் தொழிலதிபரான சோஹைல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். கணவர் சோஹைல் கதூரியா ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர் என பரபரப்பாக பேசப்பட்டது.

அதுவும் ஹன்சிகாவின் நெருங்கிய தோழியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டு விவாகரத்து செய்ததால் ஹன்சிகா தான் அவர்களை பிரித்துவிட்டு திருமணம் செய்துக்கொண்டதாக விமர்சனங்கள் எழுந்தது. அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் திருமணத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் ஹன்சிகா கடைசியாக பார்ட்னர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாடும் ஹன்சிகா தனது கணவருடன் கேக் வெட்டி பீர் பாட்டில்களுடன் கொண்டாடியுள்ளார். ஹன்சிகாவுக்கு கணவர் சோஹைல் அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கிஃப்ட்களை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். திருமண நாள் கொண்டாட்டத்தை வீடியோவுடன் சமூகவலைத்தளத்தில் வெளியிட்ட ஹன்சிகா, “தன்னுடைய திருமணம் போன்ற சிறந்த முடிவு எதுவும் இல்லை. லவ் யூ சோஹைல் என்று கூறி காதலில் முழ்கியுள்ளார்.