ரத்தம் தெறிக்கும் கிளிம்பஸ் வெளியிட்ட கார்த்திக்.. சூர்யாவின் பிறந்தநாள் பரிசு சும்மா தாறுமாறா இருக்கே..!

Author: Vignesh
23 July 2024, 9:30 am

பிரபல நடிகர் சிவகுமார் அவர்களின் மூத்த மகனான சூர்யா தற்போது தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ஆரம்பித்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட், துணை ஹீரோ போன்ற திரைக்கதைகளில் நடிக்கத் தொடங்கிய இவர், நந்தா, காக்க காக்க, பிதாமகன், மௌனம் பேசியதே போன்ற படங்களின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தார். விஜய், அஜித் இணையாக போட்டியாக வலம் வரும் சூர்யா, வாரணம் ஆயிரம், அயன், சிங்கம், மாற்றான் போன்ற திரைப்படங்கள் மூலம் செம பிரபலம் அடைந்தார். குறிப்பிட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், சமீபத்தில் நடித்து வெளியான ஜெய் பீம், சூரரை போற்று போன்ற படங்கள் இவரை இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தது.

மேலும் படிக்க: முன்னாள் காதலுடன் இணைந்த ஐஸ்வர்யா ராய்?.. ராக்கெட் வேகத்தில் வைரலாகும் புகைப்படம்..!

செலக்ட்டீவான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் சூர்யா தற்போது, இயக்குனர் சிவா இயக்கத்தில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். கற்பனை கதைக்கொண்ட வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட்டு வரும் இத்திரைப்படத்தில் திஷா பட்டாணி, யோகி பாபு, நடராஜன், ரெடின், கோவை சரளா, ரவிக்குமார் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: சூப்பர்ஸ்டார் படத்திற்கே இந்த நிலைமையா?.. 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வசூல்..!

இந்நிலையில், கங்குவார் திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா நடித்துவரும் திரைப்படம் தான் சூர்யா 44 இப்படத்தை முன்னணி இயக்குனர்களில் ஒருவரான கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்று முடிந்தது. இப்படத்தில், சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக நடிக்க பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தின் அறிமுக வீடியோ ஒன்றை முதல் ஷாட் வீடியோ என்ற பெயரில் படக்குழு சில தினங்களுக்கு முன்பு வெளியிட்டது. கிளாப் அடித்து தொடங்கும் அந்த வீடியோவில் ஒரு குட்டிச்சுவரில் அமர்ந்திருக்கும் சூர்யா எண்பதுகளில் வில்லன் போல பெரிய மீசையுடன் தாடியுடன் காட்சி அளித்தார். இந்த நிலையில், இன்றைய தினம் சூர்யாவின் பிறந்தநாளுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் சூர்யா 44 படத்தின் புதிய கிலிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/watch?v=R1ShN3v8TKo

இதனைத் தொடர்ந்து, சூர்யா 44 படத்தை முடித்தவுடன் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த ஆண்டின் இறுதிக்குள் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் எனவும் நம்பகத் தகுந்த வட்டாரங்கள் கூறி வருகிறது.

  • Allu Arjun arrest and controversy பூகம்பமாய் வெடிக்கும் அல்லு அர்ஜுன் பிரச்சனை…வீட்டின் முன்பு கலவரம்…கண்டுகொள்ளாத போலீஸார்..!
  • Views: - 187

    0

    0