நாங்கள் இருவரும் அந்த உறவில் இருந்தோம்… ஸ்ரீதேவி மறைவுக்கு பின் ரகசியம் உடைத்த கமல்!

Author: Rajesh
4 December 2023, 5:09 pm

நடிகை ஸ்ரீதேவி 80 காலகட்டத்தில் புகழின் உச்சத்தில் இருந்த நடிகை என்று கூறலாம். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி என மிகவும் பிஸியாக கலக்கி கொண்டிருந்தார். அப்போது இவர் சந்திக்காத கிசுகிசுக்களே கிடையாது என்று சொல்லலாம்.

நடிகை ஸ்ரீதேவி தென்னிந்திய படங்களை தாண்டி ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. இவர் 1996 -ம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதனிடையே, கடந்த 2018 -ம் ஆண்டு மர்மமான முறையில் ஸ்ரீதேவி இறந்துள்ளார். இந்த செய்தி பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.

திடீரென அவரது அப்பா இறந்துவிட்டதால் ஸ்ரீதேவியை வழிகாட்ட யாரும் இல்லை. ஸ்ரீதேவிக்கு கடன் கிடையாது. இருந்தாலும் போனி கபூர் சொத்துக்காக ஸ்ரீதேவியை இரண்டாம் கல்யாணம் செஞ்சிகிட்டார். அதே போல் அவரும் அந்த காலத்தில் நன்றாக சம்பாதித்துக்கொண்டிருந்தவர் தான்.

ஸ்ரீதேவி தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினியுடன் மாறி மாறி நடித்து வந்தார். அப்போது அவர்கள் இருவருடனும் ஸ்ரீ தேவி காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார். அதிலும் கமல் ஹாசனுடன் தான் அதிக கிசு கிசு செய்திகள் வெளியானது. கமல் – ஸ்ரீ தேவிக்கு விரைவில் திருமணம், பெற்றோர்கள் சம்மதித்துவிட்டார்கள் என்றெல்லாம் செய்திகள் டிசைன் டிசைனாக வெளிவரும்.

பல வருடத்திற்கு பின்னர் ஸ்ரீதேவி மறைவுக்கு பின்னர் அவருடனான கிசு கிசு செய்திகள் குறித்து கமலிடம் கேட்டதற்கு, உண்மையில் அண்ணன் தங்கை உறவு முறையில் தான் பழகி வந்தோம். எங்களது திரைப்படங்கள் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக நாங்கள் காதலர்கள் போன்று நடந்துக்கொள்வோம். அப்படி செய்ததால் தான் எங்களது படங்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்புகள் இருந்தது. அதனால் காதல் வதந்திகளை அப்படியே விட்டுவிட்டோம் என கமல் ஹாசன் ஸ்ரீதேவி மறைவுக்கு பின் இதை கூறியுள்ளார். ஸ்ரீ தேவி பாலிவுட்டிற்கு சென்று போனி கபூரை திருமணம் செய்த பின்னர் தான் இந்த வதந்திகள் எல்லாம் ஓய்ந்ததாம்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 416

    0

    0